Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மிதக்கும் பிரம்மாண்டம்.." சென்னை முட்டுக்காடு பகுதியில் மிதவை உணவகம் திறப்பு! வாவ் சூப்பரா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஈசிஆர் பகுதியில் அமைந்துள்ள முட்டுகாடு பகுதியில் இப்போது ஒரு அட்டகாசமான இடம் வந்துள்ளது. ஜாலியாக படகில் சென்று இயற்கையை ரசித்தவாரே சாப்பிட நாம் இதுவரை ஆழப்புலா தான் செல்ல வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது அதேபோல ஒரு அட்டகாசமான மிதக்கும் உணவகம் நம்மை செனனைக்கு வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நாம் தண்ணீரில் மிதக்கும் உணவகங்களை பார்த்து இருப்போம். குறிப்பாக கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் இதுபோல ஏகப்பட்ட போட் ஹவுஸ்கள் இருக்கும்.

chennai ecr

இதற்காக கேரளா சென்று திரும்பியவர்கள், அந்த மாதிரி ஒரு இடம் தமிழகத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து இருப்பீர்கள்.. உங்கள் ஏக்கம் இப்போது நிறைவேறியுள்ளது. தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் இன்று முட்டுக்காட்டில் திறக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா:

தமிழகத்தில் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க மாநில சுற்றுலாத்துறை சார்பில் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு ஆண்டுக்கு பல லட்சம் பேர் வருகை தரும் நிலையில், இதர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர சுற்றுலாதத்துறை பல நடவடி்ககைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுகாடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் (TTDC), கொச்சியில் உள்ள கிராண்டியர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து இந்த மிதக்கும் உணவகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

மிதக்கும் உணவகம்:

"சீன்ஸ் குரூஸ்" (Seanz Cruise) என்று பெயரிடப்பட்டுள்ள இது மாநிலத்தின் முதல் மிதக்கும் உணவகமாக இருக்கும். 125 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த மிதக்கும் உணவகத்தில் மொத்தம் இரு தளங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் 100 பேர் இந்த உணவகத்தில் உணவருந்தலாம். இங்கு பஃபே பாணியில் உணவு வழங்கப்படும். 3-கிமீ படகு சவாரியில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிகள் தங்கள் உணவை சாப்பிடலாம்.

6,000 சதுர அடி கொண்ட முதல் தளம் முழுமையாக ஏசி வசதியை கொண்டதாக இருக்கிறது. அங்கு டிஜே உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இரண்டாவது தளம் திறந்தவெளியாக இருக்கிறது. அங்கு தான் பஃபே பாணியில் உணவுகள் வழங்கப்படும். ரூ. 5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மிதக்கம் உணவகத்தில் பாதுகாப்பு படகுகள், தீயணைப்பாண்கள் என தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உள்ளன. மேலும், இந்த மிதக்கும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பிற் லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும்.

எப்போது:

முட்டுக்காடு படகு இல்லத்தில் ஏற்கனவே படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகள் உள்ளன அப்போது அத்துடன் இந்த மிதக்கும் உணவகமும் சேர்ந்துள்ளது. இது இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீன்ஸ் குரூஸ் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+