விசாவே தேவையில்லை.. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தாய்லாந்து.. ஆனால் ஒரு கண்டிஷன்
பாங்காக்: தாய்லாந்து நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் விசா எதுவும் இன்றி 60 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும். வரும் 11 ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகை என அறிவித்து இருந்த தாய்லாந்து அரசு, தற்போது கால வரையின்றி நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்று தாய்லாந்து. சுற்றுலாவிற்கு பெயர் போனதாகவும், உலக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் டாப் 10 நாடுகளில் ஒன்றாகவும் தாய்லாந்து உள்ளது. இந்தியா உள்பட சர்வதேச நாட்டு பயணிகள் பலரும் தாய்லாந்துக்கு அதிக அளவில் சுற்றுலா செல்கிறார்கள்.

தாய்லாந்து சுற்றுலா சென்று வர பெரிய அளவில் கட்டணமும் ஆகாது என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கூட இங்கு சுற்றுலா செல்வதை பார்க்க முடிகிறது. தாய்லாந்து நாட்டை பொறுத்தவரை சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியுள்ளது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபியில் 20 சதவீதத்தை சுற்றுலாத்துறையே பெற்றுள்ளது.
இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு நடவடிக்கைளை தாய்லாந்து அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தாய்லாந்தில் இந்தியர்களுக்கு விசா சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் விசா எதுவும் இன்றி 60 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும். இதற்கு முன்பாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
வரும் 11 ஆம் தேதியுடன் இந்த சலுகை முடிவடைய இருந்த நிலையில் தற்போது கால வரையின்றி நீட்டித்து தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய விதிகளின் படி 60 நாட்கள் வரை விசா எதுவும் இன்றி தாய்லாந்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கலாம். குடியேற்ற அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கூடுதலாக 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்.
தாய்லாந்து நாட்டை பொறுத்தவரை அங்குள்ள பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரிய பகுதிகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து இழுக்க கூடியாதாக உள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. தாய்லாந்தில் நடைபெறும் இரவு நேர கொண்டாட்டங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து இழுக்க கூடியதாக உள்ளது.
தாய்லாந்து மட்டும் இன்றி மலேசியா, கத்தார், இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியர்கள் விசா இன்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications