பொள்ளாச்சி பலூன் திருவிழா.. ஆச்சர்யமான சிறப்பு அம்சங்கள்.. கோவைக்கு குவியும் சுற்றுலா பயணிகள்
கோவை: இந்தியாவிலேயே கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தான் வருடம்தோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் 9-வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கி உள்ளது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இநத திருவிழாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ராட்சத வெப்ப காற்று பலூன்களில் பயணித்து காற்றில் பறந்து பொள்ளாச்சி நகரின் அழகை ஆகாயத்தில் இருந்து ரசிக்கலாம்.

இந்த திருவிழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்படும். அந்த வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம், ஸ்பெயின், வியட்நாம், பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ராட்சத வெப்ப காற்று பலூன்கள் பொள்ளாச்சிக்கு வந்துள்ளன. சர்வதேச பலூன் திருவிழா தொடங்கி உள்ள நிலையில் வரும் ஜனவரி 16ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம், ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ராட்சத பலூன்கள் முன்பு நின்று பொதுமக்கள் பலர் நேற்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இன்று முதல் சுற்றுலா பயணிகள் இதில் பறந்து பயணித்து மகிழ முடியும்.
இதனிடையே இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் 9-வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கி உள்ளது. சர்வதேச பலூன் திருவிழாவில் பலூன்களில் ஏறி பயணித்து பொள்ளாச்சியின் அழகை ரசிக்க முடியும். மேலும் பலூன் திருவிழாவில் இசை நிகழ்ச்சியும், குழந்தைகளுக்கான விளையாட்டுகளும், உணவு அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 10 பலூன்கள் பறக்க விட்டுள்ளோம். இந்த பலூன்களின் சராசரி உயரம் 60 அடி முதல் 100 அடி வரை உள்ளது. யானை, வாத்து, தவளை உருவங்களை கொண்ட குழந்தைகளை கவரும் பலூன்கள் இந்த முறை வந்துள்ளன. இதை இயக்குவதற்கு ஒரு பெண் விமானி உள்பட விமானிகள் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார்கள். இதில் சிறப்பு அம்சமாக ஹெலிகாப்டரில் பறந்து பொள்ளாச்சியின் இயற்கை அழகை ரசிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications