தனுஷ்கோடிக்கு டிட்வா புயல் தந்த கிப்ட்.. அரிச்சல்முனையில் புதிய மணல்மேடு.. ராமேஸ்வரத்தில் சர்ப்ரைஸ்
ராமநாதபுரம்: இந்தியாவில் புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலா தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்தில் டிட்வா புயலால் புதிய இயற்கை மாற்றம் அரங்கேறி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனையில் புதிய மணல் திட்டு உருவாகி உள்ளது. இந்த மணல் திட்டு டிட்வா புயல் தந்த பரிசு என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.. அந்த மணல் திட்டில் போய் அமருவதற்கு பறவைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் முக்கியமான இந்தியாவின் கடலோர முனையாக இருக்கிறது. இங்கு மூன்று பக்கமும் கடல் தான் காணப்படும். ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கு வராமல் பயணம் முழுமை அடையாது.அந்த அளவிற்கு முக்கியமானதலமாக இருக்கிறது. மத்திய அரசே பணம் ஒதுக்கி ரயில் பாதை அமைக்க அதிக ஆர்வம் காட்டியதும் தனுஷ்கோடிக்குத்தான். இப்போது தமிழக அரசு ஓகே சொன்னாலும், தனுஷ்கோடிக்கு ரயில் பாதை வந்துவிடும். அந்தஅளவிற்கு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவருகிறது.

தனுஷ்கோடியை சுற்றி கடலில் ஏற்படும் மாற்றங்களால் மணல் திட்டுக்கள் மற்றும் தீவுகள் அமைந்துள்ளன. ராமேஸ்வரம் தீவைச் சுற்றிலும் சுமார் 21 சிறிய தீவுகள் இப்போது உள்ளன. இவை மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக இருக்கின்றன. தனுஷ்கோடிக்கு மிக அருகில் குருசடைத் தீவு என்ற ஒரு முக்கியமான தீவு உள்ளது.
இங்கு அரிய வகை கடல் பசுக்கள் மற்றும் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. அதேபோல் முயல் தீவு என்ற ஒரு சிறிய தீவு இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சிறிய தீவுஎன்கிறார்கள் உள்ளூர் மக்கள். நல்லதண்ணீர் தீவு என்ற ஒரு தீவும் இருக்கிறது. இங்கு நன்னீர் கிடைப்பதால் இப்படி அழைக்கிறார்கள். அதேபோல் புள்ளிவாசல் தீவு என்று ஒரு தீவு இருக்கிறது. பறவைகள் சரணாலயம் போல விளங்கும்.
இந்நிலையில் அண்மையில் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்தது. கடல் சீற்றமும் மிக கடுமையாக இருந்தது. அப்போது நடந்த இயற்கை மாற்றத்தால் புதிய தீவு உருவாகி உள்ளது. இந்த தீவிற்கு வருவதற்கு பறவைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. புதிய மணல் திட்டு பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கிறது.
இங்கு புறா உள்ளிட்ட பறவைகள் ஓய்வெடுத்து செல்கின்றன. இது காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது-. ராமேஸ்வரம் அருகே உள்ள பெரும்பாலான தீவுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் ஆகும். எனவே வனத்துறையின் அனுமதி இல்லாமல் இங்கு செல்ல முடியாது. தற்போதைய நிலையில் ராமேஸ்வரம் வந்தால், குருசடைத் தீவுக்குச் செல்வதற்கு மட்டும் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்குப் படகு சவாரி வசதிகள் (மண்டபம் அருகில்) உள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications