என்ன சோனமுத்தா இப்படி ஆகிடுச்சு.. சுற்றுலா போன இளம் பெண்ணை வெறுப்பேற்றிய குரங்குகள்
சென்னை: என்ன சோனமுத்தா இப்படி ஆகிடுச்சு.. சுற்றுலா போன இளம் பெண்ணை குரங்குகள் எல்லாம் சேர்ந்து நோஸ்கட் செய்து விட்டிருக்கின்றன. இணையத்தில் உலாவும் மீம்ஸ் வீடியா பற்றி இப்போது பார்ப்போம்.
புத்தாண்டு முடிந்துவிட்டது. விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது.. பலரும் சுற்றுலாதளங்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருவீர்கள்.. சுற்றுலா தலங்களுக்கு செல்வதே மிகவும் இனிமையான அனுபவமாக இருக்கும். வருடத்தில் சில நாட்களே மலைவாசல் தலங்களுக்கு சுற்றுலா செல்வதால் அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அற்புதமாக இருக்க வேண்டும் ஆசைப்படுவோம்.

பெரும்பாலும் மலைவாசல் தலங்களில் சுற்றுலா சென்றால் அப்படித்தான் இனிமையான அனுபவமாக இருக்கும்... இயற்கையை ரசித்தபடி பிடித்த பாடல்களை கேட்டபடி, பிடித்தவர்களுடன் ஊர் சுற்றியபடி, மனதிற்கான இனிமையான பசுமையான அதேநேரம் வனவிலங்குகளை ரசித்தபடி பயணிப்பது உண்மையில் சுகமான அனுபவம் தான்.
நமது ஊர்களில் ஊட்டி, கொடைக்கானல், மேகமலை, ஏற்காடு, மூணாறு போன்ற சுற்றலா தளங்களுக்கு செல்வோர் இப்படித்தான் என்ஜாய் பண்ணுவார். அதேநேரம் சுற்றுலா தலங்களில் சில சமயங்களில் வாழ்நாளில் மறக்க முடியாதபடி சில சம்பவங்கள் நடக்கும். நாமே எதிர்பார்க்காத அளவிற்கு கிண்டலாகவும் கேலியாகவும் முடிந்துவிடும்.. அப்படியான சம்பவம் தான் வடமாநிலம் ஒன்றில் ஒரு இளம் பெண்ணுக்கு நடந்துள்ளது.
எந்த கம்பெனி பிஸ்கட்டா இருக்கும் 😂 pic.twitter.com/WG1t6ecwUi
— ❤️🔥°°ட்விட்🐦காதலன்°°❤️🔥 (@Elanthaari_Paya) January 8, 2024
என்னவென்றால், இளம் பெண் ஒருவர் மலைவாசல் தலம் ஒன்றுக்கு சுற்றுலா போயிருக்கிறார். நன்றாக சுற்றி பார்த்து மகிழ்ந்த அந்த பெண், கையில் வைத்திருந்த பிஸ்கெட்டுகளை குரங்குகளுக்கு கொடுக்க ஆசைப்பட்டார்... அதன்படியே ஒரு குரங்குக்கு கையில் பிஸ்கெட் கொடுத்தார். அதை வாங்கிய குரங்கு முகர்ந்து பார்த்துவிட்டு கீழே போட்டுவிட்டது. அதன்பின்னர் வந்த குரங்கும் பிஸ்கெட்டை வாங்கி பார்த்துவிட்டு கீழே போட்டுவிட்டது. வரிசையாக அடுத்தடுத்து வந்த குரங்குகளும் பிஸ்கெட்டுகளை வாங்கி கீழே போட்டதால், அந்த பெண் ஆச்சயர்த்துடன் பார்த்தார்.. என்ன சோனமுத்தா இப்படி ஆகிப்போச்சு என்ற கதையாக அந்த பிஸ்கெட்டுகளை குரங்குகள் வாங்கவே இல்லை.. இப்படி மொத்த குரங்கு கூட்டமும் இளம் பெண்ணை நோஸ்கட் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இது எப்போது எடுத்தது என்று தெரியவில்லை.
அதேநேரம் வனவிலங்குகளுக்கு நாம் சாப்பிடும் உணவுகளை கொடுத்து பழக்குவது தவறு.. அவை இயற்கையானவை.. இயற்கையாக உணவுகளை தேடிக்கொள்ளும்.எனவே வனவிலங்குகளுக்கு உணவு தருகிறேன் என்ற பெயரில் அவற்றிற்கு தவறான உணவுகளை தருவது வனவிலங்குகளையே பாதிக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications