தென்காசி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்
தென்காசி: தென்காசி அருகே சுரண்டையில் உள்ள முதியோருக்கான தனியார் காப்பகத்தில் அடுத்தடுத்து 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 8 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சாப்பிட்ட உணவா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே முதியோருக்கான தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

3 பேர் பலி
இந்த காப்பகத்தில் நேற்று மதிய உணவுக்குப் பின் மாலையில் செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர்கணேஷ் (வயது 42), சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகம்மாள் (60), செங்கோட்டையைச் சேர்ந்த அம்பிகா (40) ஆகியோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மூன்று பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று கோவில்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (70), மதுரையைச் சேர்ந்த விஜயா (66), மும்தாஜ் (52), சாந்தி (60), கோமதி (70), கடையநல்லூரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (64), பேச்சியம்மாள் (48), சுகுமார்(72) ஆகிய எட்டு பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், சங்கர் கணேஷ், முருகம்மாள், அம்பிகா, ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக பலியாகினர்.
வேறு ஏதும் காரணமா?
இந்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் மூன்று பேர் உயிரிழந்த தகவல் கிடைத்ததும் அரசு அதிகாரிகள் முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவு, குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
ஆய்வுக்கு பின் அதிகாரிகள் கூறியதாவது:- "பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த காப்பகத்தில் உணவு மற்றும் குடிநீர் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் மரணத்திற்கான காரணம் தெரியவரும். அவர்கள் சாப்பிட்ட உணவா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியும்" என்று தெரிவித்தனர்.
வழக்கு பதிவு செய்து விசாரணை
காப்பகத்தில் இருந்த 48 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அருகில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதியோர் இல்லத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் குறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications