மதசார்பின்மை என சொன்னாலே பாஜகவுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது.. கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் அட்டாக்
நெல்லை: தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பெரும் மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும், சிறுபான்மையினர் நலனில் அக்கற்றை கொண்டது திமுக அரசு தான் என்றும் கூறினார். மேலும் மதசார்பின்மை என சொன்னாலே பாஜகவுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது என்று விமர்சனம் செய்தார்.
நெல்லையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், குடிலை திறந்து வைத்து கேக் வெட்டினார். தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பெரும் மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் மத பாகுபாடு இன்றி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்பும் உங்களுக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்போம். பார்த்து பார்த்து உங்களுக்கான திட்டங்களை செய்து வருகிறோம்.
மதசார்பின்மை என்ற வார்த்தை ஒன்றிய பாஜக அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. தமிழ்நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என சிலர் யோசிக்கலாம். மதத்தின் பெயரால் உங்களின் உணர்வுகளை தூண்டுகிறார் என்றால் அவரை சந்தேகப்படுங்கள். சிற்பான்மையினர் நலனில் உண்மையான அன்பு கொண்ட இயக்கம் திமுக தான்.
இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஒரு தாய் பிள்ளையாக வாழ வேண்டும். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். 16 தேவாலயங்களை ரூ.21.5 கோடி செலவில் சீரமைத்துள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications