“குருநாதா”.. மனுச ஐட்டத்தை அடிச்சுட்டாங்களே! இந்து முன்னணி - இந்து மகா சபா மோதலால் நாறிய நெல்லை
நெல்லை: இந்து முன்னணி மற்றும் இந்து மகா சபா நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் மனித கழிவை ஆட்டோவில் நிரப்பி வைத்து தூக்கி வீசிய இந்து மகா சபா நிர்வாகியை போலீசார் கைது செய்தார்கள்.
நடிகர் வடிவேலுவின் ஆயிரக்கணக்கான நகைச்சுவை காட்சிகளில் மறக்க முடியாதது. குருநாதா காமெடி. அதில், தன் மீது கற்களை தூக்கி வீசும் ரவுடிகள் இருந்து தப்பித்து ஓடும் வடிவேலு ஒரு கட்டத்தில் கோபத்தில் குருநாதா என்று கத்துவார். அப்போது அங்கு வரும் ஒருவரை மிகப்பெரிய பில்டப்போடு கூட்டி வருவார் வடிவேலு.

அவரும் அரிவாளை எடுத்து சீன் போடுவார். அவரை வைத்துக்கொண்டு வடிவேலு இப்ப எரி, இப்ப எரி என்று கத்தி கூச்சல் போடுவார். உடனே கீழே கிடந்த மாட்டு சானத்தை எடுத்து அந்த ரவுடி முகத்தில் வீசி விடுவார்கள். அதை பார்த்த வடிவேலு, "குருநாதா.. மாட்டு ஐட்டத்தையும் மனுச ஐட்டத்தையும் சேர்த்து அடிச்சுட்டாங்களே" என்று பாடுவார்.
இந்த நகைச்சுவையை யாராலும் மறந்துவிட முடியாது. இதனை நினைவுபடுத்தும் சம்பவம் ஒன்று திருநெல்வேலியில் அரங்கேறி இருக்கிறது. திருநெல்வேலியை சேந்தவர் நாராயணன். இவர் இந்து மகா சபா அமைப்பின் மாநகர இளைஞரணி நிர்வாகியாக இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மாயாண்டுக்கும் முன்விரோதம் இருந்து வந்து இருக்கிறது.
இந்த நிலையில், இந்து முன்னணி நிர்வாகி மாயாண்டியின் ஆட்டோ மீது மனித கழிவு தடவப்பட்டு இருந்தது. கடந்த ஆகஸ்டு ஒன்றாம் தேதி இரவு மாயாண்டியின் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி மற்றும் ஒட்டுநரின் இருக்கையில் மனித கழிவு வீசப்பட்டு இருந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் மாயாண்டி புகாரளித்தார்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகி நாராயணன் ஆட்டோவில் மலம் தேய்த்தது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து நாராயணனை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மலம் தொடர்பான அருவருப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications