நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடையில் வருமான வரி சோதனை நிறைவு! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்?
நெல்லை: நெல்லையில் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடை தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் அது தற்போது முடிந்துள்ளது. சோதனை நடந்த இடங்களில் எல்லாம் ஆவணங்களை மட்டுமே எடுத்துச் சென்றதாகவும் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

நெல்லை என்றால் தாமிரபரணி ஆற்று நீரில் செய்யப்படும் அல்வா ஃபேமஸ்! அங்கு சென்றால் அல்வா வாங்காமல் யாரும் வரமாட்டார்கள். நெல்லையப்பர் கோயில் அருகே இருட்டுக் கடை அல்வா இருப்பது போல் சாந்தி ஸ்வீட்ஸ் உள்ளது.
இங்கு சீக்கிரம் போய் கியூவில் நின்றால்தான் அல்வா கிடைக்கும். இல்லை என்றால் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதுதான். ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்கு பின்புறம் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் கடை 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
இங்கு 3 ஷிப்டுகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நெல்லை புதிய பேருந்து நிலையம், ஜங்ஷனில் எண்ணற்ற சாந்தி ஸ்வீட்ஸ் கடை இருந்தாலும் எப்போதும் இந்த கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் இந்த கடையில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை இன்றுடன் முடிந்தது. கடை, அல்வா தயாரிப்பு கூடம், அலுவலகம், உரிமையாளர் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐடி ரெய்டு நடந்தது. அது போல் 2025 ஆம் ஆண்டு இந்த கடை அல்வாவில் தேள் இருந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது குடோனில் ஆய்வு மேற்கொண்டபோது சாந்தி ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர், "இங்கு தேள் வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. குடோனில் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். இந்த வெப்பமான பகுதிக்கு பூச்சிகள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. இருந்தபோதிலும் இந்த விசாரணைக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளார். மிகவும் புகழ்பெற்ற நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவில் தேள் இருந்ததாக பரவும் வீடியோ அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அண்மையில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அல்வா விலையை சாந்தி ஸ்வீட்ஸ் ஏற்றியதாகவுமே் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டு அது முடிவடைந்தது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications