ஒரு வாரத்தில் நிறைய செய்தி.. நயினார் நாகேந்திரன் டிவிஸ்ட்.. விஜய்க்கு செக்
திருநெல்வேலி: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று திமுக, அதிமுக, பாஜக மூன்று கட்சிகளையும் விமர்சித்துள்ளார். அதற்கு ஏற்கனவே அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் பாஜக நயினார் நாகேந்திரன், தன் கட்சியில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பதே விஜய்க்கு தெரியாது என்று அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஒரு வாரத்தில் முக்கிய செய்திகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.

நயினார் நாகேந்திரன் பதில்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். அனைவருக்கும் விடிகின்ற அரசாக வர வேண்டும். அன்புமணி, டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ஜி கே வாசன், ஏ.சி சண்முகம், பாரிவேந்தர், செல்லமுத்து, பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் பல அமைப்புகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்துள்ளோம்.
மதுராந்தகத்தில் சாதாரண கூட்டமாக நினைத்து மாநாடு நடத்தி விட்டோம். தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். முன்பு என்னிடம் செய்தியாளர் சந்திப்பில் கூட்டணியில் இருந்து பிரிந்து பிரிந்து போகிறார்களே. நீங்கள் எப்படி வலுவான கூட்டணி என்று ஏளமான கேட்டீர்கள். அதற்கான பதில் கடந்த 23 ஆம் தேதி கிடைத்துவிட்டது.
ஒரு வாரத்தில் செய்தி
தேமுதிக மற்றும் ராமதாஸ் பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார்களா என்கிற கேள்விக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதில் கிடைக்கும். பிரேமலதா சொன்னதைப் பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. ஒரு வாரத்தில் உங்களுக்கு நிறைய செய்திகள் கிடைக்கும். எல்லாவற்றையும் இப்போதே சொல்ல முடியாது. அடுத்தடுத்து செய்திகள் வரும்.
கடந்த 5 வருடங்களில் முதலமைச்சர் முழுக்க முழுக்க பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வை கொண்டு வந்ததே அவர்கள் தான். சொத்து வரி உயர்வு, பால் விலை எல்லாமே உயர்ந்துவிட்டது. தேர்தல் வருவதால் பயத்தில் பொங்கல பரிசாக ரூ. 3,000 வழங்கியுள்ளனர். மற்றபடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 தருவதை தவிர வேறு எதையும் திமுக செய்வதில்லை.
விஜய் மீது விமர்சனம்
தவெக தலைவர் விஜய்க்கு அவர் கட்சியில் என்ன நடக்கிறது என்ற விபரமே தெரியவில்லை. தவெகவில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பதாவது அவருக்கு தெரியுமா. விஜய்க்கு எந்த அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமும் பாஜகவுக்கு இல்லை. யாரையும் அடிமையாக வைத்திருக்க வேண்டியதில்லை. எல்லோரும் சுதந்திரமாக செயல்படலாம். நாங்கள் தீய சக்தியோ, ஊழல் கட்சியோ இல்லை. அதனால் எங்களை விமர்சிக்கவில்லை" என்றார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications