நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவில் ”தேள்..” உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
நெல்லை: நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் கடை அல்வாவில் தேள் இருந்ததாக சங்கரன்கோவிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ எடுத்து பதிவிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத் துறை சாந்தி ஸ்வீட்ஸ் கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நெல்லை என்றாலே முதலில் நம் நியாபகத்துக்கு வருவது தித்திப்பான அல்வா தான். அதுவும் நெல்லை இருட்டுக்கடை அல்வா என்று சொன்னாலே வாயில் எச்சு ஊறும்.. அந்த அளவுக்கு நெல்லையில் அல்வா பேமஸ். நெல்லை வரும் வெளியூர் பயணிகள் கூட கட்டாயமாக அல்வாவை வாங்கி செல்வார்கள்.

நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா
இதில் நெல்லை டவுனில் உள்ள இருட்டுக்கடை அல்வாக்கு பிறகு மக்கள் அதிகம் விரும்பி வாங்கப்படுவதும், சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா தான். நெல்லை ஜங்ஷனில் பஸ் ஸ்டாண்டுக்கு பின்புறம் இந்த அல்வா கடை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த கடை செயல்பட்டு வருகிறது. இருட்டுக்கடை அல்வா மாலை நேரத்தில் மட்டுமே வாங்க முடியும். ஆனால் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா கடையானது 24 மணி நேரமும் திறந்திருக்கும். 3 ஷிப்டுகள் படி ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
நெல்லை புதிய பேருந்து நிலையம், ஜங்ஷனில் எண்ணற்ற சாந்தி ஸ்வீட்ஸ் கடை இருந்தாலும் எப்போதும் இந்த கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும். மிகவும் புகழ்பெற்ற இந்த கடையில் வாங்கப்பட்ட அல்வாவில் தேள் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அல்வா பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது குறித்து விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தேள் கிடந்ததாக புகார்
சங்கரன்கோவில் கீழ நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அன்பு. இவர் வேலை விஷயமாக கடந்த 13 ஆம் தேதி நெல்லை வந்துள்ளார். அப்போது அவர் சாந்தி ஸ்வீட்சில் 1 கிலோ அல்வா வாங்கியுள்ளார். 4 கால் கிலோ பாக்கெட்டுகளாக வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு சென்றதும் ஆசையோடு சாப்பிடுவதற்காக எடுத்தபோது, ஒரு அல்வா பாக்கெட்டில் ஏதோ பூச்சி இருப்பது போல் தெரிந்துள்ளது. இதையடுத்து உற்று பார்த்தபோது சிறிய அளவிலான தேள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அன்பு இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவிய நிலையில், திருநெல்வேலி உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ், நெல்லை ஜங்ஷனில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் கடை மற்றும் சிந்துபுந்துறையில் உள்ள குடோனில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அல்வாவில் எப்படி தேள் வந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
குடோனில் ஆய்வு
குடோனில் ஆய்வு மேற்கொண்டபோது சாந்தி ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர், "இங்கு தேள் வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. குடோனில் 100 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். இந்த வெப்பமான பகுதிக்கு பூச்சிகள் வருவதற்கான வாய்ப்பு குறைவு. இருந்தபோதிலும் இந்த விசாரணைக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளார். மிகவும் புகழ்பெற்ற நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் அல்வாவில் தேள் இருந்ததாக பரவும் வீடியோ அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications