இம்சையான இன்ஸ்டாகிராம்.. ஹப்பியை நம்பிப் போன தென்காசி இளம்பெண்! கடையில் மறக்க முடியாத சோகம்!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திருமணமாகி கணவரை பிரிந்து வசித்து வந்த பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது. கூடுதல் பணம் கேட்டு அந்த பெண் தரம் மறுத்ததால் மேலும் சிலருக்கு அந்த வீடியோவை அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர்களும் அந்த பெண்ணை மிரட்டியதால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..

பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி அம்மன் நகரைச் சேர்ந்த கண்ணனின் மகன் சக்திவேல் (32) என்பவர் தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த சக்திவேல், அங்கு வசித்து வந்த ஒரு இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார்.

அந்த இளம்பெண் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆனாலும் குழந்தை இல்லாததால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக தனது கணவரை பிரிந்து தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆரம்பித்த இந்த அறிமுகம், பின்னர் இருவருக்குமிடையே நெருங்கிய உறவாக மாறியது.

Tenkasi Instagram crime

இன்ஸ்டாகிராம் மிரட்டல்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, இருவரும் தனிமையில் சந்தித்து இருந்தனர். அப்போது சக்திவேல் அந்த இளம்பெண்ணுடன் இருந்த ஆபாச காட்சிகளை அவரது செல்போனில் ரகசியமாக பதிவு செய்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி, சக்திவேல் அந்த பெண்ணிடமிருந்து ரூ.3 லட்சம் பணம் பறித்ததாகக் கூறுகின்றனர் போலீசார்.

ஆபாச வீடியோ

இதற்குப் பிறகு, அவர் மேலும் ரூ.1 லட்சம் தருமாறு மிரட்டியபோது, அந்த பெண் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், பழிவாங்கும் நோக்கில் அந்த ஆபாச வீடியோவை தன்னுடைய உறவினர்களில் சிலருக்கு அனுப்பி வைத்துள்ளார். வீடியோவை பார்த்த அவர்களும் அதனை பயன்படுத்தி அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான அந்த இளம்பெண், தன்னுடைய தாயிடம் சம்பவத்தை கூறி ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

விபரீத முடிவு

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது, நேற்று காலை அந்த இளம்பெண் தனது தாத்தா வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீஸ் கைது

தற்கொலைக்கு முன் அந்த இளம்பெண் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும், அதில் தன்னை தற்கொலை செய்யத் தூண்டியவர்களின் பெயர்கள் குறிப்பிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த கடிதத்தின் அடிப்படையில், சக்திவேல் மற்றும் மருதம்புத்தூரைச் சேர்ந்த முத்துராஜா (36), முருகேசன் (42) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+