மதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணனின் நண்பர்! துரை வைகோ அழைப்பு! வைகோ வரவேற்பு!
தென்காசி: மதுரையில் டாக்டர் சரவணனின் நிழல் போல் அவரோடு வலம் வந்த கரு.சுந்தர் வைகோ முன்னிலையில் இன்று மதிமுகவில் இணைந்திருக்கிறார்.
தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ இல்லத்துக்கு சென்ற கரு.சுந்தரை துரை வைகோ தனது தந்தையிடம் அறிமுகம் செய்திருக்கிறார்.
கரு.சுந்தர் ஏற்கனவே மதிமுகவில் மாநில அளவில் தொண்டர் அணி நிர்வாகியாக இருந்த காரணத்தால் அவரை எளிதில் அடையாளம் கண்டுகொண்ட வைகோ, ''இவர் ரொம்ப பாசமானவர்'' என எல்லோர் முன்னிலையிலும் புகழ்ந்து கரு.சுந்தரை வரவேற்றிருக்கிறார்.

மேலும், பழைய நிகழ்வுகள் சிலவற்றையும் சுட்டிக்காட்டி வைகோ நினைவு கூர்ந்துள்ளார். தனது மகன் துரை வைகோவுக்கு பக்கபலமாக புதிது புதிதாக மதிமுகவில் இணைபவர்களால் வைகோ சற்று உற்சாகமுடன் காணப்படுகிறார்.
கரு.சுந்தருக்கு விரைவில் மாநில அளவில் மதிமுகவில் ஒரு பதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்த பிறகு அரசியலே வேண்டாம் என்று இருந்த கரு.சுந்தரை துரை வைகோ தான் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு மதிமுகவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

திமுக, அதிமுக என ஆளும் கட்சி ஆண்ட கட்சிகளில் இணைவதற்கு பலரும் ஆர்வம் காட்டினாலும், கொள்கை காரணமாக மதிமுகவில் இணைபவர்களின் எண்ணிக்கையும் மெல்ல உயர்ந்து வருகிறது.
தென் மாவட்டங்களின் நுழைவுவாயிலாகவும் தலைநகராகவும் விளங்கும் மதுரையில் இன்னும் பல புது முகங்களை மதிமுகவுக்கு அழைத்து வருவதற்கான பணிகளில் துரை வைகோ ஈடுபட்டுள்ளார்.
மதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் திட்டத்தில் உள்ள துரை வைகோ தொடர்ந்து சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications