எங்களை கூட்டணியை விட்டு வெளியேற்றி பாருங்கள்.. 100 தொகுதிகளில் திமுக தோற்கும்! விசிக நிர்வாகி பேச்சு
தைரியம் இருந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியை விட்டு வெளியேற்றி பாருங்கள், தமிழகத்தின் வட மாவட்டங்களில் 100 தொகுதிகள் உங்களுக்கு காணாமல் போகும் என்று, விசிக நிர்வாகி திமுகவுக்கு சவால்விடுத்தார்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவ படுகொலைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் கார்த்திக் பேசியபோது,
திமுக அதிமுக கொடி பறக்காத இடங்களிலும் விசிக கொடி பறக்கும், திமுக தலைமை தைரியம் இருந்தால் விசிக வை கூட்டணியை விட்டு வெளியேற்றி பாருங்கள். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் கை காட்டுபவரே முதல்வராக வரமுடியும்.
விசிக-வை கூட்டணியை விட்டு வெளியேற்ற உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? திமுக வெளியேற்றினால் வட மாவட்டங்களில் திமுகவுக்கு 100 தொகுதிகள் காணாமல் போகும் என திமுகவுக்கு சவால் விட்டு பேசினார்.
திமுகவை விமர்சித்த ஆதவ் அர்ஜுன் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் ஆங்காங்கு இதற்கு எதிராக இரண்டாம் கட்ட தலைவர்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்கள். தென்காசி மாவட்டத்திலும் அப்படி ஒரு குமுறல் வெளியே வந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications