Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலை போறீங்களா.. வழக்கமான இடங்களை விடுங்க இதை பாருங்க! சுற்றிப்பார்க்க வேண்டிய தரமான இடங்கள்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: சம்மர் தொடங்கியாச்சி. சென்னையில் எல்லா இடங்களும் சுற்றி பார்த்தாகிவிட்டது என்று நினைப்பவர்கள், ஒரு நாளில் சென்றுவிட்டு திரும்ப வேண்டும் என நினைப்பவர்களுக்கு நிச்சயம் திருவண்ணாமலை ஓர் நல்ல பயண அனுபவத்தை கொடுக்கும்.

Tour: Unmissable Tourist Places in Thiruvannamalai

திருவண்ணாமலை என்றாலே எல்லோருக்கும் நினைவு வருவது அண்ணாமலையார் கோயில்தான். ஆனால் இந்த கோயிலை தாண்டி பல்வேறு இடங்கள் இந்த மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க இருக்கிறது. அதில் முக்கியமான இடம்தான் ஜவ்வாதுமலை. ஊட்டி, கொடைக்கானலில் தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ள நிலையில், ஜவ்வாதுமலை போன்ற ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளுக்கு செல்வது மனதுக்கு இதமாக இருக்கும்.

கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் இந்த ஜவ்வாது மலை. சுமார் 260 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலையில் ஏராளமான அரிய வகை மூலிகை செடிகள் இருக்கின்றன. இந்த மலையில் ஏறத்தாழ 10,500 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணக்கிடைக்கின்றன. அதாவது இங்கு புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த காலகட்டத்தில்தான் வேளாண் தொழில் வளர்ச்சியடைய தொடங்கியது. அதுவரை சுற்றிக்கொண்டே இருந்த மனிதன் ஒரு இடத்தில் நிலையாக நிலைத்து நிற்க தொடங்கினான்.

Tour: Unmissable Tourist Places in Thiruvannamalai

கால்நடைகளை வளர்த்தல், இறந்தவர்களுக்கான சடங்கு செய்தல் போன்றவை இந்த காலக்கட்டத்தில் உருவானதாக சொல்லப்படுகிறது. இந்த ஜவ்வாது மலையில் இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளகள் இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போதும் மலையாளிகள் எனப்படும் பழங்குடி சமூக மக்கள் இந்த மலையில் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள கோவிலூர் எனும் கிராமத்தில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. ஆனால் இது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை விடவும் மிகவும் பழமையானதாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Tour: Unmissable Tourist Places in Thiruvannamalai

அதேபோல மற்றொரு முக்கியமான இடம் திருமலை சமணர் கோயிலாகும். இந்த கோயிலும் ஏறத்தாழ சுமார் 1,100 ஆண்டுகள் பழமையானதாகும். வேலூரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் ஆரணியை அடுத்த திருமலை எனும் ஊரில் சிறு குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோயிலில் இயற்கையான நிறங்களை கொண்டு ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் 15ம் நூற்றாண்டில் வரையப்பட்டதாக சொல்லப்படுகிறது. இபோதும் இது அழியாமல் அப்படியே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சமண தலங்களில் இது முக்கியமான தலமாகும்.

Tour: Unmissable Tourist Places in Thiruvannamalai

திருமலை சமணர் கோயில் எப்படி முக்கியமானதோ அதேபோல மாமண்டூர் குடைவரைக்கோயிலும் மிகவும் முக்கியமானதாகும். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் நரசமங்கலம் எனும் கிராமத்தில் இந்த குடைவரைக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மலை குன்றில் மொத்தம் 4 குகைகள் அமைந்துள்ளன. இதில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இந்த மலையின் வடக்கு பகுதியின் முடிவில் சமணர் படுகை ஒன்று இருக்கிறது. இங்கு ஒரு தமிழ் கல்வெட்டு இருக்கிறது. இந்த கல்வெட்டுக்கு வயது ஏறத்தாழ 2,000 ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலை, குகைகள், தமிழ் கல்வெட்டு என இந்த இடம் அப்படியே நம்மை ஆதிகாலத்திற்கு அழைத்து சென்றுவிடும்.

Tour: Unmissable Tourist Places in Thiruvannamalai

இதேபோல மிக முக்கியமான மற்றொரு இடம் சீயமங்கலம் குடைவரைக்கோயில். தமிழ்நாட்டில் பல்வேறு நடராஜர் சிறபங்கள் இன்று காணப்படுகின்றன. ஆனால் இதில் எது முதன்மையானது? எது முதலில் செதுக்கப்பட்டது? என்கிற கேள்விக்கான விடை இந்த கோயிலில்தான் பொதிந்திருக்கிறது. அதாவது தமிழ்நாட்டின் முதல் நடராஜர் சிற்பம் இந்த கோயிலில்தான் செதுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வந்தவாசியின் தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் இந்த மலை குன்றும் அதில் இந்த கோயிலும் அமைந்திருக்கிறது.

இது தவிர தடாகபுரிஸ்வரர் ஆலயம் மற்றும் மடம், கூழமந்தல் சோழீஸ்வரர் கோயில், பிரம்மதேசம் சந்திரமௌலீஸ்வர்ர் கோயில், சாத்தனூர் அணை, முனுகப்பட்டு அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில், குரங்கணில்முட்டம் வாலிஸ்வரர் திருக்கோயில், நெடுங்குன்றம் இராமச்சந்திர பெருமாள் திருக்கோயில், படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில், தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோயில், தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில், ஏரிக்குப்பம் எந்திர சனீஸ்வரர் கோயில், செய்யாறு அருள்மிகு வேதபுரிஸ்வர்ர் திருக்கோயில் மற்றும் பர்வதமலை ஆகியவை சுற்றிபார்க்க ஏற்ற இடமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+