ரீல்ஸ் வீடியோ எடுங்க! பரிசுகளை அள்ளுங்கள்! குற்றாலம் குறித்த சுற்றுலாவை மறக்காதீங்க!
Subscribe to Oneindia Tamil
தென்காசி: உலக சுற்றுலா தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான சுற்றுலா விழிப்புணர்வு போட்டி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில் 30 முதல் 90 வினாடிகள் கொண்ட இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி அனுப்பும் மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

இந்த போட்டி மூலம் மாணவர்கள் சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும் தங்கள் கலை மற்றும் திறமைகளை வெளிப்படுத்தவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் வீடியோக்களை செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ரீல்ஸ் வீடியோ எடுத்து பரிசு பொருட்களை அள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications