வரலாற்றில் இல்லாத பேரழிவு.. மணாலியில் சிக்கிய சுற்றுலா பயணிகள் இந்த ஓட்டல்களில் இலவசமாக தங்கலாம்
மணாலி: மணாலியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா சென்ற மக்கள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் பேரதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் மணாலியில் சுற்றுலா பயணிகள் யாராவது சிக்கியிருந்தால் அவர்கள் தங்கள் ஹோட்டல்களில் இலவசமாக தங்கி கொள்ளலாம் என பிரபல ஹோட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை வடமாநிலங்களை புரட்டி எடுத்து வருகிறது. கடுமையான மழை பொழிவால் ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் இருந்து பல தரை பாலங்கள் அடியோடு அடித்து செல்லப்பட்டுள்ளன. இரும்பு பாலங்கள் பல இல்லாமலேயே போனது.

இமயமலை பகுதியில் உள்ள இடங்கள் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றவை. கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கிய நிலையில்,
வரலாற்றில் இல்லாத பேரழிவினை சந்தித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.
எனவே இமாச்சலப் பிரதேசம் செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குலுவை மணாலியுடன் இணைக்கும் சாலையின் நீண்ட பகுதிகள் பியாஸ் நதியில் விழுந்துவிட்டது.
மண்டி மற்றும் குலு இடையே நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரோஹ்தாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை நோக்கிய பாதையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மணாலி-லே நெடுஞ்சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது. நிலச்சரிவு அபாயம் காரணமாக சிம்லா-கல்கா ரயிலும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மணாலிக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு பயணிகளுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. மணாலி பகுதியைச் சுற்றியுள்ளவர்கள், இப்போதைக்கு தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தங்களுடைய தங்குமிட வளாகத்திற்குள் இருக்குமாறும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
தற்போது ஆறுகள் மற்றும் நீரோடைகள் காற்றாற்று வெள்ளம் சீறிப் பாய்வதால், பயணிகள் ஆற்றங்கரையோர பகுதிக்கு எந்த காரணம் கொண்டும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்கள். மணாலியில் உள்ள அட் பிரிட்ஜ் அடித்து செல்லப்பட்டுள்ளது. கின்னாரின் மேல் பகுதிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல சுற்றுலா பயணிகள் மணாலியில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது,.
இந்நிலையில் மணாலியில், சுற்றுலாப் பயணிகள் யாராவது சிக்கிக் கொண்டால், அவர்கள் எங்கள் ஹோட்டல்களான பியாஸ் பள்ளத்தாக்கு மற்றும் பியாஸ் ரெசிடென்சிக்கு வரலாம். ஹோட்டலில் தங்குவதற்கு பணம் எதுவும் வசூலிக்கப்படாது, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பியாஸ் ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக தொடர்பு எண்களை அறிவித்துள்ளது.
தொடர்பு எண்கள்:
- 9050126060 (வேத் பிரகாஷ்)
- 9053126060
- 8059052948
- 9466290004
மற்ற தங்குமிடங்களும் உள்ளன:
- புர்வாவிற்கு அருகில் உள்ள பழைய சோலாங் பள்ளத்தாக்கு சாலையில் உள்ள ஆப்பிள் பழத்தோட்டம் காட்டேஜ்.
- ஹம்ப்டா பாஸ் சாலையில் மணாலி ட்ரீ ஹவுஸ் & கஃபே, வில்லேஜ் பிரினி.
- ஹோட்டல் BEAS ரீஜென்சி
- ஹோட்டல் பியாஸ் பள்ளத்தாக்கு
- ரங்காரியில்.
இந்த தகவலை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
In Manali, if any tourist is stranded, they can come to our hotels, Beas Valley and Beas Residency. No money will be charged for staying in the hotel, and all necessary assistance will be provided.
— Go Himachal (@GoHimachal_) July 11, 2023
Here are the contact numbers:
- 9050126060 (Ved Prakash)
- 9053126060
-…
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications