கொடைக்கானல் டூர் போக பிளான் பண்றீங்களா.. இங்க மட்டும் போக முடியாது.. வனத்துறை முக்கிய அறிவிப்பு
திண்டுக்கல்: யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் எந்த பகுதிக்கும் போய் சுற்றி பார்க்கலாம்.. ஆனால் பேரிஜம் ஏரிக்கு போவதற்கு மட்டும் அவ்வளவு எளிதில் முடியாது.. வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும்.. பேரிஜம் ஏரி மிக அற்புதமான வனப்பகுதியாகும். அந்த காலத்தில் மூணாறு செல்ல எஸ்கேப் சாலை இருந்த பகுதியாகும்.

இங்கு அரிய வகை வனவிலங்குகள், யானைகள், சிறுத்தை, புலி, காட்டு மாடு, நரி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதேபோல் அரிய வகை தாவரங்களும் இருக்கின்றன. இங்கு சுற்றி பார்க்க ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.. அனுமதி பெற்றே சுற்றுலா பயணிகள் தற்போது வரை சென்று வருகிறார்கள்.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக யானைகள் இந்த பகுதியில் முகாமிட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் பேரிஜம் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். முகாமிட்டிருந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
இதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம், பேரிஜம் வனப்பகுதிக்கு சென்று வந்த சுற்றுலா பயணிகள், யானைகள் கூட்டத்தை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்கள். இதையடுத்து பேரிஜம் வனப்பகுதியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தார்கள். இதனிடையே பேரிஜம் வனப்பகுதியை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசித்து வந்தனர்.
இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் செந்தில்குமார் நேற்று கூறுகையில், 'பேரிஜம் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருந்தால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பேரிஜம் வனப்பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று கூறியிருந்தார். இதையடுத்து யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications