இரவு 7 மணி தான் டைம்.. மூணாறு சுற்றுலா பயணிகளுக்கு வருகிறது கடும் கட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

மூணாறு: கேரளா மாநிலத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான மூணாறு பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிக்கு இரவு 7 மணிக்குள் வரவேண்டும் என்று வல்லுனர் குழுவினர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மூணாறு புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறில் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் குளுகுளுவென இருக்கும். வெயில் காலத்தில் மட்டும் கொஞ்சம் வெயில் இருக்கும். சமவெளி அளவிற்கு வெயில் இருக்காது என்றாலும் இங்கும் ஓரளவு வெயில் இருக்கும்.

Tourists in Munnar area should come to the lodge before 7 pm expert committee reports in HC

கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். மூணாறு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதியாகும். இடுக்கி மாவட்டம் முழுமையாக மலைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் என்பதால் காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக உலாவும். இதனால் தொழிலாளர்களை அடிக்கடி காட்டுயானைகள் தாக்கிவிடும். இதில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.. இதுதவிர வீடுகள், கடைகள் மற்றும் விளைபயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்துகின்றன.

மனிதன்-வனவிலங்கு மோதல் உச்சத்தில் இருக்கும் ஒரு மாவட்டம் இந்தியாவில் இருக்கிறது என்றால் அது கேரளாவின் இடுக்கி மாவட்டம் தான். இடுக்கி மாவட்டத்தில் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் மோதலுக்கான காரணங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒரு வல்லுனர் குழுவை சில மாதங்களுக்கு முன்பு கேரள உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது. இது குறித்து அந்த குழுவினர் ஆய்வு நடத்தினர். அந்த குழுவினர் நேற்று முன்தினம் எர்ணாகுளத்தில் உள்ள கேரள உயர்நீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- " இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதில் இரவு நேரம் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே வாகனங்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். வனப்பகுதியில் உள்ள சாலைகளில் பயணம் செய்ய இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கக்கூடாது.

சுற்றுலா பயணிகள் இரவு 7 மணிக்குள் தங்கும் விடுதிகளுக்கு வர வேண்டும். மூணாறை அடுத்துள்ள சூரியநெல்லி பகுதியில் இருந்து கொழுக்குமலை பகுதிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல தினசரி 187 ஜீப்புகள் பயன்படுத்தப்படுகிறது. அந்த பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வு அறிக்கை வரும் வரை சூரியநெல்லி பகுதியில் இருந்து கொழுக்குமலைக்கு ஜீப்புகள் கூடுதலாக செல்ல கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும்.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அருகில் சோலார் மின்வேலி அமைக்க வேண்டும், பகல் நேரத்தில் மட்டும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள மாட்டுப்பட்டி, ராஜமலை கல்லார் ஆகிய பகுதிகளிலும், பூப்பாறை பகுதிகளிலும் கழிவு குப்பைகளை தின்பதற்காக காட்டு யானைகள் வருகின்றன.

Tourists in Munnar area should come to the lodge before 7 pm expert committee reports in HC

ஒரு முறை குப்பைகளை காட்டு யானைகள் தின்றால், மீண்டும், மீண்டும் அந்த பகுதிக்கு வந்துவிடுகின்றன. எனவே மூணாறு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் உள்ள கழிவு குப்பைகளை நவீன ரீதியில் அழிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூணாறை அடுத்துள்ள ராஜமலை, மாட்டுப்பட்டி, எக்கோ பாயிண்ட் ஆகிய பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த அந்தந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை குப்பைகளை அழிக்க வேண்டும். மூணாறு அருகே உள்ள கல்லார் பகுதி குப்பை கிடங்கில் சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்.

வனவிலங்குகள் குப்பை கிடங்குக்குள் நுழையாமல் இருக்க இரும்பு கம்பியால் வேலிகள் அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை வனத்துறைக்கு கொடுத்த ரூ.6 கோடி நிதியை மூணாறு பகுதியில் காட்டு யானைகள் வாழ்வாதாரத்திற்கும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருக்கக்கூடிய குடியிருப்புகளின் மறுசீரமைப்புக்கும் பயன்படுத்த வேண்டும்" இவ்வாறு வல்லுநர் குழுவினர் உயர்நீதிமன்றத்திற்கு சமர்பித்த தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+