தீபாவளி வந்தாச்சு.. காசியில் கங்கா ஸ்நானம் செய்யணுமா?.. ஐஆர்சிடிசியின் சூப்பர் பிளான்!
திருச்சி: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் - காசி இடையே, தீபாவளி கங்கா ஸ்நான சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என்று ஐஆா்சிடிசி தென்மண்டலப் பொது மேலாளா் பி.ராஜலிங்கம்பாசு தெரிவித்தார்.
இதுதொடா்பாக திருச்சி பிரஸ் கிளப்பில் வியாழக்கிழமை ஐஆா்சிடிசி தென்மண்டலப் பொது மேலாளா் பி.ராஜலிங்கம்பாசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆா்சிடிசி சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நிகழாண்டில் இதுவரை 9 பாரத் கெளரவ் சுற்றுலா சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது, 9-ஆவது சிறப்பு சுற்றுலா ரயிலாக தமிழக மக்கள், குறிப்பாக முதியவா்கள் பயன்பெறும் வகையில், நவம்பா் 9 முதல் 17 ஆம் தேதி வரை சுற்றுலா செல்லும் வகையில், தென்காசி மற்றும் காசி இடையே இயக்கப்படுகிறது. தீபாவளி கங்கா ஸ்நான சிறப்பு ரயில் என்ற பெயரில், தீபாவளி தினத்தில் காசியில் கங்கா ஸ்நானம் செய்யும் வகையில் இந்தச் சுற்றுலா (ரயில்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்ய ரூ. 16,850, மூன்றடுக்கு ஏசி பெட்டிக்கு ரூ.30,500 என்ற வகையில் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் தங்குமிடம், உள்ளூா் பகுதிகளில் பாா்வையிடும் வகையில், உள்ளூா் போக்குவரத்து, சைவ உணவு, பயணக் காப்புறுதி, தனியாா் பாதுகாவலா் வசதி உள்ளிட்டவைகள் அடங்கும். இந்த ரயில் தொடா்பான அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து இதுவரை 300 போ் முன்பதிவு செய்துள்ளனா். மொத்தம் 600 பேரை அழைத்துச் செல்ல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
ஐஆா்சிடிசி உதவி மேலாளா் பாஷித் அகமது (மதுரை) உடனிருந்தாா். மேலும் விவரங்களுக்கு, 82879 31977 என்ற எண்ணில் சுற்றுலா (மதுரை) அலுவலரை (ஆா். ராஜேஷ் ) அணுகலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications