கொடைக்கானலை விடவும் குளிரான இரண்டு இடங்கள்.. தேனி பக்கத்தில் பட்ஜெட்டில் சுற்றுலா
தேனி: ஊட்டி மற்றும் கொடைக்கானலை விடவும் குளிரான இடம் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்றால், நிச்சயம் கிடையாது.. அதேநேரம் சில சமயங்களில் கொடைக்கானலை விடவும் சில இடங்களில் சில சமயங்களில் குளிராக இருக்கும். அப்படித்தான் தேனி பக்கத்தில் மேகமலையும், கொழுக்குமலையும் தற்போது குளிராக இருக்கிறது. இங்கு பொதுவாகவே கொடைக்கானலை போல் தான் வெப்ப நிலை காரணப்படும். மழைப்பொழிவு, வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது இது மாறுபடும். பட்ஜெட்டில் தங்கி சுற்றி பார்க்க கொழுக்குமலையும், மேகலையும் அற்புதமான இடங்கள் ஆகும்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி தான் தமிழ்நாட்டின் மிக குளிரான இடமாகும். அதற்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குளிர் அதிகமாக இருக்கும்.இந்த இரண்டுமே சர்வதேச அளவில் புகழ் பெற்ற கோட்டைவாசல் தலங்கள் ஆகும். இங்கு சுற்றுலா செல்ல ஏராளமான இடங்கள் உள்ளன. ஊட்டி மற்றும் நீலகிரி முழுவதையும் சுற்றிப்பார்க்க 3 நாட்கள் முதல் நான்கு நாட்கள் தேவைப்படும்.

கொடைக்கானலுக்கு 3 நாள் தேவை
அதேபோல் தான் கொடைக்கானலை சுற்றிப்பார்க்க 2 முதல் 3 நாட்கள் முழுமையாக தேவைப்படும். ஏனெனில் அவ்வளவு இடங்கள் உள்ளன. இதில் டிரக்கிங் செல்ல விரும்பினால் இன்னும் இரண்டு நாள் கூடுதலாகவே தேவைப்படும். அந்த அளவிற்கு ஊட்டியும், கொடைக்கானலும் மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட இடங்கள் ஆகும்.
தேனியில் ஒரு ரவுண்டு
ஆனால் கோடைக்காலத்தில் அறை வாடகை கொடைக்கானலிலும், ஊட்டியிலும் சில சமயங்களில் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மாற்று இடங்களை தேடுவார்கள். இதேபோல் கொடைக்கானல் வரும் பலர், அப்படியே பக்கத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் ஒரு ரவுண்டு அடித்து விட்டு வருவது வழக்கம். இதேபோல் மூணாறு, தேக்கடி செல்பவர்களும் தேனி மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை ஒரு ரவுண்டு அடிப்பது வழக்கம்.
தேனி சுற்றுலா இடங்கள்
பலருக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள அருவிகளான கும்பக்கரை, சுருளி, சோத்துப்பாறை, சின்ன சுருளி, குரங்கணி போன்ற பகுதிகளை நன்கு தெரியும். இவை எல்லாம் மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகள் ஆகும். அதேநேரம் மலையில் உள்ள கொழுக்குமலை மற்றும் மேகமலை போன்ற பகுதிகள் சுற்றிப்பார்க்க மிக அருமையாக இருக்கும். பட்ஜெட்டுக்கும் ஏற்றதாக இருக்கும்.
குளிரான இடங்கள்
பொதுவாகவே மேகமலை மற்றும் கொழுக்குமலை இரண்டுமே வெயில் சற்று குறைவாகவே உள்ள இயற்கை விரும்பிகளின் சொர்க்க பூமியாகும். தனிமையில் இயற்கையையும் காடுகளையும் ரசிக்க விரும்புவோருக்கு அற்புதமான இடம் என்றால் அது மேகமலை மற்றும் கொழுக்குமலை தான். ஏனெனில் இரண்டிலுமே தற்போது கொடைக்கானலை விட வெப்பநிலை குறைவாக உள்ளது. காரணம் அங்குள்ள வானிலையில் ஏற்பட்ட மாற்றம் தான். இந்த மாற்றம் தற்காலிகமானது தான். ஏனெனில் கொடைக்கானலில் தான் வெயில் குறைவாக இருக்கும். ஆனால் மேகமலை மற்றும் கொழுக்குமலையில் மலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வெப்பநிலை குறைவாக உள்ளது.
மேகமலை சுற்றுலா
தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 35 கிமீ தூரத்தில் மேகமலை அமைந்துள்ளது. இங்கு எங்கு திரும்பினாலும் பசுமையான தேயிலை தோட்டங்கள், அடர்ந்த காடுகள், மேகக்கூட்டங்களின் நகர்வு, எங்கு திரும்பினாலும் அணைகள் என்று ரம்மியமாக இருக்கும். இங்கு அணை மற்றும் ஆறுகள் பசுமையான காடுகள் மட்டுமே உள்ளது. அணைகள் குளிக்க முடியாது. அருவிகளில் குளிக்கலாம். சூப்பராக இருக்கும். தங்கும் வசதிகளும் பட்ஜெட்டில் உள்ளன. ஆனால் பெரிய அளவில் ஓட்டல்கள் கிடையாது.

கொழுக்குமலை டிரக்கிங்
அதேபோல்தான் கொழுக்குமலையும்.. கொடைக்கானலுக்கு நிகரான கிளைமேட் ஆண்டு முழுவதும் கொழுக்குமலையில் இருக்கும். இதற்கு குரங்கணி வழியாக டிரக்கிங் போகலாம். ஆனால் தீ விபத்து ஏற்பட்டதால் அனுமதி கிடையாது. ஆனால் கேரளா வழியாக வாகனங்களில் செல்லலாம். போடியில் இருந்து போடி மெட்டு, சூரியநெல்லி வழியாக போகலாம்.

கொழுக்குமலை சூரிய உதயம்
சூரியாநெல்லியில் இருந்து ஜீப்பில் போக வேண்டியது வரும். கொழுக்குமலையில் அதிகாலையில் சூரிய உதயத்தைப் பார்ப்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். எப்போதுமே ரம்மியமான சூழல் நிலவும் இங்கு, தங்க வேண்டும் என்றால் முன்பே அனுமதி வாங்க வேண்டும். மூணாறு வரும் யாராக இருந்தாலும் இந்த இடத்தை மறந்தும் மிஸ் பண்ண மாட்டார்கள்..போய் பாருங்கள் அனுபவம் புரியும். வரும் வழியில் குரங்கணியில் சூப்பராக குளித்துவிட்டு வரலாம். அதுவும் நல்ல இனிமையான அனுபவமாக இருக்கும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications