"செக்ஸ் டூர்" செல்லும் இளசுகள்.. திடீரென பிரபலமடையும் நகரம்! ஆனால் இது நீங்க நினைக்கிற ஊர் இல்லை
டோக்கியோ: பொதுவாகச் சுற்றுலாவைப் பொறுத்தவரை அதில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பாலியல் சுற்றுலா.. அதாவது பாலியல் உறவுகளைக் கொள்ளவே சுற்றுலாவுக்குச் செல்வார்கள். பொதுவாக பாலியல் சுற்றுலா என்றாலே இளசுகளுக்குத் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது அந்த நாடுகளுக்குப் போட்டியாக வேறு ஒரு இடம் பாலியல் சுற்றுலாவுக்குப் பிரபலமாகி வருகிறதாம். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் சர்வதேச நாடுகளுக்குச் சுற்றுலாவுக்குச் செல்வது கணிசமாக அதிகரித்து வருகிறது. அதுபோல சுற்றுலா செல்வதில் பல வகை இருக்கிறது. ஹனி மூன் டிரிப், குடும்பத்துடன் செல்வது, நண்பர்களுடன் செல்வது எனப் பல வகை இருக்கிறது.

அதில் ஒரு வகை தான் பாலியல் சுற்றுலா.. இதை செக்ஸ் டூர் என்றும் அழைக்கிறார்கள். இந்த பாலியல் சுற்றுலா என்பது ஒரு சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய சுற்றுலாவாகும். அதாவது பாலியல் செயல்பாடுகளை எளிதாக்குவதற்காகவே பிரத்தியேகமாகச் செல்லும் சுற்றுலாவே செக்ஸ் டூர் என்று அழைக்கப்படுகிறது.
பாலியல் சுற்றுலா: நம்ம ஊரில் கூட இளசுகள் பலர் இந்த செக்ஸ் டூர் செல்வார்கள். பொதுவாக இந்தியாவில் இருந்து செல்வோர் அதிகம் பாங்காங் நகருக்குத் தான் போவார்கள். தாய்லாந்தில் உள்ள பாங்காங் நகர் இதுபோன்ற செக்ஸ் டூர்களுக்கு பேமஸான ஒன்றாகும். அதேபோல பிலிப்பைன்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற பாலியல் சுற்றுலாவுக்குச் செல்வார்கள்.
ஆனால், சமீப காலமாக வேறு ஒரு நாடு பாலியல் சுற்றுலாவில் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. பாலியல் சுற்றுலா என சொல்லும் போது பலருக்கும் இந்த ஊர் நினைவில் கூட வராது.. அப்படி என்ன ஊர் எனக் கேட்கிறீர்களா.. அது வேறு எதுவும் இல்லை.. ஜப்பான் தலைநகர் டோக்கியோ தான் அது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாலியல் சுற்றுலாவையும் தங்கள் திட்டத்தில் ஒரு பகுதியாக வைத்துக் கொள்கிறார்களாம்.
காரணங்கள்: சர்வதேச அளவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பான் யென் மதிப்பு சரிந்து வரும் நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் பாலியல் சுற்றுலாவுக்கு ஜப்பான் வர ஆர்வமாக இருக்கிறார்களாம். ஜப்பான் நாட்டில் பாலியல் தொழில் என்ன தான் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட இதுபோன்ற செயல்கள் அங்கு அதிகரித்தே வருகிறதாம்.
ஜப்பான் நாட்டில் கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், அதன் பின்னரே இந்த பிரச்சினை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால் அங்குள்ள இளம்பெண்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் பாதுகாப்பை வலியுறுத்தும் செய்போரன் அமைப்பின் பொதுச்செயலாளர் யோஷிஹிட் தனகா தெரிவித்துள்ளார்.
பெரிய ஆபத்து: அவர் மேலும் கூறுகையில், "ஜப்பான் இப்போது ஏழை நாடாக மாறிவிட்டது. இதனால் பாலியல் சுற்றுலா வருவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதுபோன்ற காரியங்களுக்கு வரும் வெளிநாட்டவரை அதிகளவில் பார்க்க முடிகிறது. குறிப்பாகச் சீனாவில் இருந்து அதிகளவில் இதுபோல வருகிறார்கள்.
இங்கு இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது மிகக் கடினமாக இருக்கும் நிலையில், இது இளம்பெண்களைத் தவறான பாதையில் தள்ளுகிறது. ஜப்பான் நாட்டில் எளிதாக பாலியல் சேவைகளைப் பெற முடியும் என்று வெளிநாட்டவர்கள் நினைக்கிறார்கள். இது ரொம்பவே தப்பான போக்கு. இது மிகவும் சீரியஸான ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. அரசு தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்" என்கிறார்.
போலீசார் நடவடிக்கை: அந்நாட்டு போலீசாரும் இதுபோன்ற செயல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட சமூக வலைத்தளம் மூலம் இதுபோன்ற செயல்களுக்கு ஆள் எடுத்த மிகப் பெரிய நொட்வொர்க்கை கொண்ட 5 பேர் ஜப்பான் போலீசார் கைது செய்திருந்தனர். போலீசார் இதுபோன்ற நடவடிக்கை எடுத்தாலும் அதையும் தாண்டி பாலியல் சுற்றுலா பெரும் தலைவலியாகவே அங்கு மாறியிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications