மாலத்தீவை விட்டு தள்ளுங்க! இந்தியர்கள் வேறு எங்கெல்லாம் விசா இன்றி சுற்றலாம்! இத்தனை நாடுகள் இருக்கா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாலத்தீவைப் புறக்கணிப்போம் என்ற முழக்கம் இப்போது அதிகரித்து வரும் நிலையில், மாலத்தீவைப் போலவே வேறு எந்த நாடுகளுக்கு நம்மால் விசா இல்லாமல் போக முடியும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறிய நிலையில், மாலத்தீவைப் புறக்கணிப்போம்.. லட்சத்தீவை சுற்றிப்பார்ப்போம் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

 What are the 62 countries that Indians can travel without Visa

இந்தியா வரும் நாட்களில் லட்சத்தீவை மிகப் பெரிய சுற்றுலா தளமாக உருவாக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், அங்கே செல்ல போலீஸ் க்ளியரன்ஸ் முதல் பெர்மிட் வரை பல கட்டுப்பாடுகள் இருக்கிறது.

மாலத்தீவு: மாலத்தீவைப் பொறுத்தவரை அங்கே இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்பதும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அங்கே விரும்பி செல்ல காரணமாக இருக்கிறது. இப்போது மாலத்தீவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கம் அதிகமாக உள்ள நிலையில், மாலத்தீவைத் தவிர வேறு எந்த நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியர்களுக்குச் சர்வதேச பயணம் என்பது எளிமையான ஒன்றாக மாறி வருகிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கும் நிலையில், பல உலக நாடுகள் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்து வருகிறது. இது சுற்றுலாவைச் சுலபமான ஒன்றாக மாற்றுகிறது. இல்லையென்றால், விசாவுக்கு நாம் முன்கூட்டியே அப்ளை செய்ய வேண்டும்.

விசா: அப்போதும் கூட விசா கிடைக்குமா கிடைக்காது எனப் பதற்றத்திலேயே தான் இருக்க வேண்டும். இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் on arrival விசா என்ற நடைமுறை இருக்கிறது. அதாவது அங்கே சென்று நாம் விசாவை பெற்றுக்கொள்ளலாம். இது நமது பயணத்தை எளிமையானதாக மாற்றுகிறது.

இரு நாடுகள் ஒரே மாதிரியான சுற்றுலாவை வழங்கினால் மக்கள் விசா இல்லாத நாடுகளைத் தேர்வு செய்வார்கள். அப்படிப் பார்த்தால் இந்தியர்களால் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வர முடியும். ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, இந்தியாவின் பாஸ்போர்ட் சர்வதேச அளவில் 80ஆவது இடத்தில் இருக்கிறது.

62 நாடுகள்: அதாவது இந்த 62 இதன் மூலம் இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் அல்லது அங்கே சென்று விசா எடுத்தால் போதுமானதாக இருக்கும். அங்கோலா, பார்படாஸ், பூட்டான், பொலிவியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், புருண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், குக் தீவுகள், ஜிபூட்டி, டொமினிகா, எல் சல்வடோர், எத்தியோப்பியா, பிஜி, காபோன், கிரெனடா, கினியா-பிசாவ், ஹைட்டி, இந்தோனேசியா நாடுகளுக்குச் செல்ல விசா தேவையில்லை.

ஈரான், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கிரிபதி, லாவோஸ், மக்காவோ (SAR சீனா), மடகாஸ்கர், மலேசியா, மாலதீவுகள், மார்ஷல் தீவுகள், மொரிட்டானியா, மொரிஷியஸ், மைக்ரோனேசியா, மாண்ட்செராட் மொசாம்பிக், மியான்மர், நேபாளம், நியு, ஓமன் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் செல்ல விசா தேவையில்லை.

எந்தெந்த நாடுகள்: அதேபோல பலாவ் தீவுகள், கத்தார், ருவாண்டா, சமோவா, செனகல், சீஷெல்ஸ், சியரா லியோன், சோமாலியா, இலங்கை, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், தான்சானியா, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, டோகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துனிசியா துவாலு, வனுவாடு, ஜிம்பாப்வே நாடுகளுக்குச் செல்லவும் விசா தேவைப்படாது.

சர்வதேச அளவில் எந்த நாட்டிற்குச் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்த பாஸ்போர்ட் இன்டெஸ் உதவும், இந்தாண்டு மொத்தம் 6 நாடுகள் முதலிடத்தில் உள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஆறு நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பட்டத்தை பகிர்ந்து கொண்டன. இந்த ஆறு நாடுகளின் மக்கள் விசா இல்லாமல் 194 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

இந்த லிஸ்டில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. ஆப்கன் மக்கள் வெறும் 28 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதில் 29 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்துடன் சிரியா இரண்டாவது இடத்தை பிடிக்கும் நிலையில், ஈராக் (31) பாகிஸ்தான் (34) நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+