Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி கீரிப்பாறை, கொடைக்கானல் பேத்துப்பாறை.. நண்பர்களுடன் ஜாலி சுற்றுலா.. இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: மழைக்காலங்களில் பொதுவாக தண்ணீர் வரத்து அதிகம் வரும் சுற்றுலா தலங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அருவிகளில், ஆறுகளில், அணைகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும். இழுத்து சென்றுவிட வாய்ப்பு மிக அதிகம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆறுகள், அருவிகளுக்கு இப்போது போகவே கூடாது. ஏனெனில் கன்னியாகுமரி மற்றும் கொடைக்கானலில் யாருமே எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கீரிப்பாறை. கன்னியாகுமரியின் புகழ் பெற்ற பெருஞ்சாணி அணையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கீரிப்பாறை.இங்குள்ள ஆறு தான் காளிகேசம். கீரிப்பாறை வனப் பகுதியில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இங்கு வனவிலங்குகளை சர்வ சாதாரணமாக காண முடியும். அடர்ந்த வனப்பகுதியில் இந்த சுற்றுலா தலத்திற்கு பலரும் வருவார்கள். அப்பபடி வந்த ரெகு என்பவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

What happened to the tourists who went to Keeripparai in Kanyakumari and Pethuparai in Kodaikanal

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சண்முகம்புரம் வடக்குத்தெருவை சேர்ந்த 37 வயதாகும் ரெகு என்பவர் டெம்போ டிரைவர் ஆவார. இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இவர் தீபாவளி பண்டிகையையொட்டி நண்பர்களுடன் கீரிப்பாறை லேபர் காலனியில் உள்ள பரளியாறு நீர் தேக்கம் பகுதியில் குளிக்க சென்றுள்ளார். அங்கு நண்பர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, ரெகு ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நீந்தி செல்லும்போது திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார்

அவரை நண்பர்கள் எவ்வளவோ தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும், கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புபடையினர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி ரெகுவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து இரவு ஆனாதால் திரும்பி சென்றுவிட்டர்கள். பின்னர் நேற்று காலையில் தீயணைப்பு படையினர் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று நீண்ட நேரம் தேடியும் ரெகுவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரது கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி கீரிப்பாறை போலவே ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடந்துள்ளது. கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் அஞ்சு வீடு அருவி அமைந்திருக்கிறது., இந்த அருவியானது சுமார் 50 அடி ஆழத்தில் தண்ணீர் கொட்டும் . மிக அழகான இந்த அருவி, ஆபத்தானது ஆகும்.

கடந்த 18-ந் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 11 மாணவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் அஞ்சு வீடு அருவியை சுற்றி பார்த்துள்ளனர். அப்போது, கோவை மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் பொள்ளாச்சியை சேர்ந்த 21 வயதாகும் நந்தகுமார் என்பவர் அருவியில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது நண்பர்கள் கண் முன்னே தண்ணீரில் வேகத்தில் அவர் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து கடந்த 3 நாட்களாக தீயணைப்புதுறையினர், வனத்துறையினர் அவரையும் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று கொட்டும் மழையில் 4-வது நாளாக நந்தகுமாரை போலீசார் தேடினர். பின்னர் அருவியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலையில் நந்தகுமார் உடல் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து டோலி கட்டி உடல் மேற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து நந்தகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

கொடைக்கானல், கன்னியாகுமரி இரண்டு இடங்களில் ஆற்றில் குளிக்க போனவர்கள் உயிருடன் இல்லை. பொதுவாக இதுபோன்ற மழைக்காலங்களில் அருவிகளுக்கும் அணைகளுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக தடை செய்யப்பட்ட பகுதி என்றால் போகவே கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+