தாய்லாந்து சுற்றுலா செல்லும் இந்தியர்கள் ஏமாறாமல் இருக்க என்ன செய்யலாம்.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

பாங்காங்: தாய்லாந்து சுற்றுலா செல்லும் இந்தியர்கள் அறிய வேண்டிய விஷயங்கள் குறித்து இன்ஸ்டா பக்கமான டிமாக் டூர்ஸ் என்ற பக்கத்தில் பிரபலம் ஒருவர் பேசியிருக்கிறார். அவர் தாய்லாந்தில் இந்தியர்கள் எப்படி எல்லாம் ஏமாறுகிறார்கள் என்பது குறித்தும், பட்டாயா, புக்கட், பாங்காங்கில் எங்கெல்லாம் உணவு விலை குறைவு என்பதையும், சுற்றுலா படகு சவாரி குறித்து விளக்கம் அளித்துள்ளார். தாய்லாந்தில் இந்தியர்களிடம் பணம் பறிக்கும் முயற்சிகள் எப்படி எல்லாம் நடக்கும் என்பதையும் விவரித்துள்ளார்.

தாய்லாந்து சுற்றுலா செல்லும் இந்தியர்கள் அறிய வேண்டிய விஷயங்கள் குறித்து இன்ஸ்டா பக்கமான டிமாக் டூர்ஸ் என்ற பக்கத்தில் சமூக வலைதள பிரபலபம் ஒருவர் பேசியுள்ளார். அவர் தாய்லாந்து சுற்றுலா குறித்து கூறுகையில், "ஒரு வருடத்திற்கு 20 லட்சம் பேர் தாய்லாந்து டிராவல் பண்றாங்க அப்படீன்னா, அதில் 50 சதவீதம் முதல் முறை டிராவல் பண்றாங்க அப்படீன்சு வச்சுக்குவோமே, ஈஸியாக டூரிஸ்ட் ஸ்கேமில் விழுந்துவிடுவார்கள்..
எடுத்துக்காட்டாக பாங்காங்கில் டுக் டுக் இருக்கும்... 100 தாய்பாட் என்று சொல்வார்கள்.. ஆனால் இறங்கும் போது ஒரு நபருக்கு 100 தாய்பாட் என்று மாட்டிவிடுவார்கள்.. அடுத்து பட்டாயா, புக்கட், பாங்காங்கில் விலை உயர்ந்த ஜெம் கேலரி போது பார்த்து உஷாராக வாங்குங்கள் .சில சமயம் டூப்ளிகேட்டை தட்டிவிட்டுவிடுவார்கள்...

What Indians can do to avoid being scammed while traveling to Thailand Watch the video

இந்திரா மார்க்கெட், பிரத்துனம் மார்க்கெட் போனால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மணி எக்ஸேஜ் பண்ணித்தருகிறேன் என்று பங்களாதேஷ், பாகிஸ்தானியர்கள் நிறைய பேர் வருவார்கள்.. உஷாராகஇருக்க வேண்டும்.. எல்லா ஊரிலும் உள்ளது போலவே டாக்ஸி மீட்டர் போடாமல் ஸ்டார்ட் பண்ண சொல்லாதீங்க.. பெஸ்ட் ஆப்சன் நம்மூரில் எப்படி ஓலா உபேர் இருக்கிறதோ, அதுபோல் கிராப், போல்ட் இருக்கிறது. பட்டாயா போனீங்க அப்படீன்னா கண்டிப்பாக கோரல் தீவில் தண்ணீர் சறுக்கு விளையாட்டு விளையாடுவீங்க.. ஜெட் ஸ்கி எனப்படும் தண்ணீர் ஊர்தியில் பயணிக்க தொடங்கும் முன்பே புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்..

அதன்பின்னர் அதனை பயன்படுத்துங்கள்.. ஏனெனில் இதை உடைத்துவிட்டீர்கள்.. அதனை உடைத்துவிட்டீர்கள் என்று வருவார்கள்.. அதேபோல் இரவில் பட்டயாவில் வாக்கிங் ஸ்ட்ரீட்டில் நடந்து செல்லும் போது, கண்டிப்பாக லேடி பாய்ஸ் ரொம்ப ஜாஸ்தி... தங்க செயின், பிரேஸ் லெட் போட்டிருந்தீங்க அப்படீன்னா.. பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.. பட்டயாவில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் கடற்கரை உணவுகள் இங்கு ஏக பிரபலம்..

நீங்கள் நடந்து செல்லும் போது, வாக்கிங் ஸ்ட்ரீட்டில் கடல் உணவுகள் சாப்பிட்டால் மிகவும் காஸ்ட்லியாக இருக்கும். அதேநேரம் ஏரியாவில் 3வது தெருவில் உள்ளூர் கடல் உணவு கடைகள் உள்ளன. இது உள்ளூர் மக்கள் சாப்பிடும் இடம் ஆகும்... கடல் உணவு இங்கு அன்லிமிடெட் சாப்பிட வெறும் 600 தாய்பாட் தான் வரும்... தாய்லாந்தில் மோட்டார் பைக்கை வாடகைக்கு எடுக்கும் போது, கிளீனாக 360 டிகிரியிலும் செக் செய்து கொள்ளுங்கள்.. டேமேஜ் பைக்கை கொடுத்துவிட்டு நீங்கள் தான் உடைத்தாக கூறிவிடுவார்கள்..

பாங்காங்கில் டாமினோன் சதக் பிளோட்டிங் மார்கெட் போனீங்க அப்படீன்னா, ஒரு புல் போட்டை வாடகைக்கு எடுத்தாலே 400 முதல் 600 தாய்பாட் தான் வரும்.. ஆனால் அங்கிருப்பவர்கள் ரொம்ப ஈஸியாக 2000 தாய்பாட் என்று சொல்வார்கள்.. அதனை வாங்கிடாதீங்க... புக்கட், கிராப்பி போனீங்க அப்படீன்னா பேபி மங்கிஸ், பல்லிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள சொல்வார்கள். ஆனால் புகைப்படம் எடுத்த பிறகு 300 முதல் 500 தாய்பாட் சார்ஜ் பண்ணுவார்கள்..." இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+