“மஞ்சும்மல் பாய்ஸ்” படம் இருக்கட்டும்.. “மஞ்சும்மல்” எங்கே இருக்கு? அங்குள்ள சுற்றுலா தலங்கள் என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் சக்கைபோட்டு போட்டு வரும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைபடத்தில் வரும் கேரளாவின் மஞ்சும்மல் பகுதி எங்கு உள்ளது? அங்குள்ள சுற்றுலா தலங்கள் என்னென்ன? என்று விரிவாக பார்ப்போம்.
எப்படி ஒரு காலத்தில் பிரேமம் திரைப்படம் கேரளாவை தாண்டி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, வட மாநிலங்கள் என பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதோ அதே போன்று மீண்டும் ஒரு மலையாள படம் தற்பொழுது பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுதான் மஞ்சும்மல் பாய்ஸ். கேரளாவின் மஞ்சும்மல் என்ற பகுதியில் இருந்து இளைஞர்கள் கொடைக்கானல் சுற்றுலா வரும்போது எதிர்கொண்ட உண்மையான அனுபவத்தை தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் தமிழ் படங்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

தமிழ்நாட்டில் இதற்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு மக்கள் ஆர்வமாக சென்று படத்தை கண்டு களித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை பார்த்த பின்னர் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பலரும் கொடைக்கானல் சுற்றுலா செல்வது எப்படி என்ற தகவல்களை இதை குறிப்பிட்டு வெளியிட்டு வருகின்றனர். நாம் ஒரு மாற்றத்துக்கு இந்த இளைஞர்களின் சொந்த ஊரான மஞ்சும்மல் எப்படி இருக்கிறது? என்று உங்களிடம் தெரிவிக்க விரும்பினோம்.
எனவே அது தொடர்பான விபரங்களை சேகரித்தோம். அப்போது தான் பல சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு கிடைத்தன. மஞ்சும்மல் என்பது கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியை அடுத்து அமைந்துள்ள ஒரு அழகிய ஊர். கொச்சிக்கு மிக அருகாமையில் இருப்பதாலேயே இதை சுற்றி ஏராளமான பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளன. எல்லூர், கலமச்சேரி, எலமக்காரா, வடுதலா என பல்வேறு பகுதிகள் மஞ்சும்மலை சுற்றி அமைந்து உள்ளன. அதேபோல் கொச்சியும் ஆளுவாவும் இதற்கு அருகில் உள்ளது கூடுதல் ஸ்பெஷல்.
கொச்சின் நகரம் விரிவடைந்து கொண்டே செல்வதால் அங்கு வரவேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மஞ்சும்மலுக்கு வருகின்றன. ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளும் அங்கு எழுந்து விட்டன. கொச்சியின் சுற்றுலா தலங்கள் என்று சொல்லப்படும் போர்ட் கொச்சி, ஷெராய் கடற்கரை, மட்டாஞ்சேரி மாளிகை, என அனைத்தும் இதற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளன. சரி மஞ்சும்மலுக்கு எப்படி செல்வது என்று கேட்கிறீர்களா? கொச்சியில் இருந்து வெறும் 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மஞ்சும்மல்.
காக்கநாட்டுக்கு மிக அருகாமையில் உள்ளது. கொச்சியிலிருந்து கல்லூர் கட வந்தாரா சாலை வழியாக சென்றால் 18 கிலோமீட்டர் தொலைவில் மஞ்சு மில் வந்தடையும் இதற்கு 38 நிமிடங்கள் பயண நேரம் ஆகும். அதேபோல் கொச்சியில் இருந்து மகாத்மா காந்தி சாலை வழியாகவும் மஞ்சுமலுக்கு செல்லலாம். இதன் தொலைவு 17.7 கிலோ மீட்டராக இருந்தாலும் பயண தூரம் 41 நிமிடங்களாகும். மஞ்சுமல்லிலேயே நல்ல தரமான தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்றவை உள்ளன.
கொச்சியில் விடுதிகளின் கட்டணம் அதிகமாக இருப்பதன் காரணமாக பலர் மஞ்சுமல்லுக்கு வந்து விடுதி அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கி கொச்சி மற்றும் அருகாமையில் உள்ள சுற்றுலா தலங்களை பொதுமக்கள் சுற்றிப் பார்ப்பது வழக்கமாக உள்ளது. விடுமுறை கிடைத்தால் நீங்களும் ஒருமுறை மஞ்சுமல்லுக்கு சென்று வரலாம்.












Click it and Unblock the Notifications