ஊட்டி அல்லது கொடைக்கானல்.. தமிழகத்தில் ஓரளவு குளிரான இடம் எது? ஒரு கேள்வி கேட்டது குத்தமா.. சம்பவம்
ஊட்டி: பட்ஜெட்டுக்கு ஏற்றது போல் இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று வர , தமிழகத்தில் ஓரளவு குளிரான இடம் எங்கு உள்ளது என்று கேள்வி கேட்டவருக்கு மறக்க முடியாத சம்பவம் செய்திருக்கிறார்கள் நம்மூர் நெட்டிசன்கள்.. கடல்லயே இல்லையாம் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை.. அவர் ஏன்டா கேட்டோம் என்று நினைக்கும் அளவிற்கு பதில் அளித்துள்ளார்கள்..
தமிழகத்தில் வெப்ப அலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.. தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 108 டிகிரி முதல் 100 டிகிரிக்குமேல் இருக்கிறது. எங்குமே வெப்பநிலை குறைவாகவும் இல்லை.. மழையும் இல்லை.. பேனை 12ம் நம்பரில் வைத்தாலும் வெப்பம் தாங்க முடியாது குருநாதா என்பது போல் தான் இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் பலர் ஏசி மாட்டி வைத்திருக்கிறார்கள்.

ஏசியை போடாமல் இரவில் தூங்கவே முடியாத என்கிற நிலை சும்மாவே சென்னையில் இருக்கிறது. டிசம்பரில் கூட பேன் போடாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாத ஒரே ஊர் என்றால் அது சென்னை தான். அப்படிப்பபட்ட ஊரில் ஏப்ரல் மே மாதம் எப்படி இருக்கும் என்பதை சொல்லவா வேண்டும். காலில் சலங்கை கட்டிவிட்டது போல் ஆடுகிறது வெயிலின் ஆட்டம். சென்னை மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இதே நிலை இருப்பதால், பலரும் குளிரான பிரதேசம் எங்காவது இருக்கிறதா என்று தேடி அலைகிறார்கள்..
தினசரி வானிலையை செக் செய்தால், தமிழ்நாட்டில், ஊட்டி அல்லது கொடைக்கானலில் மட்டுமே வெயில் குறைவாக உள்ளது. மற்ற ஊர்களில் நிலைமை மோசமாகவே உள்ளது. மூணாறில் எல்லாம் சமவெளிக்கு நிகரான வெயில் அடிக்கிறது. ஊட்டி, கொடைக்கானலிலும் பகலில் நன்றாக வெயில் அடிக்கவே செய்கிறது. இரவில் தான் குளிராக உள்ளது. மேகங்கள் தவழந்து வந்து மூடிச்செல்வது எல்லாம் சுத்தமாக இல்லை..

இந்தசூழலில் நெல்லையைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர் ; பட்ஜெட்டுக்கு ஏற்றது போல் இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று வர , தமிழகத்தில் ஓரளவு குளிரான இடம் எங்கு உள்ளது என்று கேள்வி கேட்டார்.. அதற்கு நெட்டிசன்கள் பலர் கொடுத்த பதில், அவருக்கு மறக்க முடியாத அளவிற்கு வந்துள்ளது. "பிரிட்ஜ் திறந்துவிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள் லோ பட்ஜெட் அதுதான்" என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். சென்னைக்கு வந்துருங்க.. என்று கிண்டலாக இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார். "வீட்லயே AC போட்டு உக்காருங்க சகோ. தேக்கடிலயே 5நிமிசம் வெளில நடக்க முடில.. 3 இளனீர் தேவைப்படுது.." என இன்னொரு நெட்டிசன் கூறியுள்ளார்.
அதேநேரம் இன்னொரு நெட்டிசன் அளித்த பதிலில், ஊட்டி, கொடைக்கானல் தான் பெஸ்ட். விடுமுறை காலம் என்பதால் கூட்ட நெரிசல் அதிகமா இருக்கும். ஊட்டியைவிட கொடைக்கானல் கூட்டமும் கம்மி, அட்ராக்சன்ஸ்கு றைவு. அப்படி இல்லைன்னா அருவியில் தண்ணீர் வருகிறதான்னு தெரிந்துகொண்டு ஓகேனக்கல் போகலாம். பட்ஜெட் பிரண்ட்லி .. குளிருக்கு மூணாரும் ஓகே தான் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த ஒருவர், "இவங்களை நம்பிலாம் போகாதீங்க ப்ரோ.. கொடைக்கானல்லயே பகல்ல வெயில் வாட்டி எடுக்குது. நைட்டு வேணும்னா குளிரா இருக்கும்.. ஊட்டி வேணும்னா டிரை பண்ணலாம்.. மத்தபடி தமிழ் நாட்டுல எல்லா இடங்களும் சூடாதான் இருக்கு.." என்று கூறியுள்ளார்.
வீட்டு ப்ரிட்ஜ் தான் நமக்கு பெஸ்டு.. போற மக்கள் கூட்டமே எவ்வளவு குளிரையும் உஷ்னமாக்கிடறாங்க.. என்று ஒருவர் கூறியுள்ளார். வேலை நாட்களாக பார்த்து விடுமுறை எடுத்து ஊட்டி போய் வாருங்கள். பகலில் ஓரளவு வெயில் இருந்தாலும் மாலை, இரவு நேரங்கள் அமர்க்களம். அருகில் உள்ள கோத்தகிரி, குன்னூர் சென்று வரலாம் என்று இன்னொருவர் கூறியுள்ளார். அதேநேரம் பல நெட்டிசன்கள் வெயில் அதிகமாக உள்ள ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை பக்கம் வரசொல்லி கேட்டிருக்கிறார்கள். சிலர் தண்ணீர் தொட்டி தான் பெஸ்ட் என்ற ரீதியில் பதில் அளித்து கிண்டல் செய்துள்ளார்கள். இதனால் கேள்வி கேட்ட நெல்லை நெட்டிசன், "வந்துருக்க பின்னூட்டங்களை பாத்தா.. வீட்டு பின்ன பெரிய தண்ணி தொட்டி கட்டி, அதுல ஐஸ் போட்டு.. உள்ள உக்கார வேண்டிய தான் போல" என்று கூறியுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications