200 ரூபாய்க்கு கூட பயணிக்கலாம்.. குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி?
சென்னை: இந்தியாவில் தற்போது 200 ரூபாய்க்கு கூட டிக்கெட் எடுத்து விமானத்தில் பயணிக்க முடியும். ஆனால் அதற்கான வழிகளைத்தான் நாம் காண வேண்டும். குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
இன்றைக்கு விமானத்தில் செல்வது என்பது எளிதானது அல்ல.. விமான கட்டணம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் சாமானியர்கள விமானத்தில் பயணம் செய்யும் கனவு, வெறும் கனவாக போய்விடுகிறது. அதேநேரம் விமான நிறுவனங்கள் சில நேரங்களில் பயண கட்டணத்தை சலுகையாக குறைக்கிறார்கள். இந்த கிரிடிட் கார்டு பயன்படுத்தினால் தள்ளுபடி, இந்த ஆப்பில் புக்கிங் செய்தால் தள்ளுபடி என்று அறிவிக்கிறார்கள்.

இதேபோல் விமான டிக்கெட் விற்காத நாட்களில் குறைந்த கட்டணமே வசூலிக்கிறார்கள். நாம் பயணிக்க விரும்பும் பாதையில் மட்டுமல்ல, இந்தியாவில் இருந்து நாட்டில் உள்ள எந்த நகரத்திற்கும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். அதற்கான நாட்கள் என்ன என்பதை கவனித்து, நாம் தான் சரியான முறையில் புக்கிங் செய்ய வேண்டும். இந்தியாவிற்குள் மட்டுமல்ல.. இந்தியாவில் இருந்து உலகின் எந்த நகரத்திற்கும் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும். ஏன் இந்தியா என்று இல்லை.. உலகின் எந்த மூளையில் இருந்தும் எந்த மூளைக்கும் குறைவான கட்டணத்தில் விமானத்தில் போக முடியும். ஆனால் அந்த நாளை தேர்ந்தெடுத்து பயணிப்பது நம் கையில் தான் இருக்கிறது.
சரிப்பா, குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி என்பது சொல்லுப்பா.. என்கிறீர்களா.. நிச்சயம் இப்போதே பார்ப்போம். பெரிய மேஜிக் எல்லாம் ஒன்றும் இல்லை.. skyscanner app என்ற ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யுங்கள்.அதில் போய் பிளைட் பகுதியில் நகரத்தின் கட்டத்தில் இந்தியா என்று டைப் செய்யுங்கள். கீழே everywhere (எங்கு வேண்டுமானாலும்) என டைப் செய்யுங்கள்.
நேரம், நாள் என எதையும் குறிப்பிட வேண்டாம். அப்படி செய்தால் இந்தியாவில் மிககுறைவான கட்டணத்தில் எந்தெந்த வழித்தடத்தில் விமானங்கள் உள்ளன என்பதை இந்தியா என்று காட்டும். இந்தியாவை கிளிக் செய்தால், அதில் எந்தெந்த நகரங்களுக்கு இடையே எந்த நாளில் குறைவான கட்டணம் என்பதை காட்டும். வெளிநாடு என்றால் வெளியிலேயே குறைவான கட்டணங்களை காட்டும். இந்தியாவிற்கு 200 ரூபாயில் இருந்த குறைவான கட்டணம் இருப்பதை காட்டும். 500, 1000 , 2000, 3000 என விரும்பிய நகரங்களுக்கு குறைந்த கட்டணம் காட்டும்.
skyscanner app ஆப்பில் எந்த நாளில் குறைவான கட்டணம் என்பதையும், எந்தெந்த நகரங்களுக்கு இடையே குறைவான கட்டணம் என்பதையும் காட்டும். இதை பார்த்துவிட்டு அப்படியே புக்கிங் செய்ய தேவையில்லை.. நேரடியாக எந்த விமான நிறுவனமோ அதன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று புக்கிங் செய்தால் கட்டணம் மிக குறைவாக இருக்கும். வங்கி கார்டுகளுக்கான ஆபர்கள் இருந்தால் அதுவும் கிடைக்கும். அதேபோல் மேக் மை ட்ரிப், ஐஆர்சிடிசி உள்ளிட்ட டிராவல் ஏனென்சிகள் வழியாகவும் புக்கிங் செய்யலாம். அவர்களும் ஆஃபர்களை வழங்குகிறார்கள். உங்களுக்கு வேண்டிய நாளில் எளிதாக புக்கிங் செய்யலாம். வெளிநாடுகளுக்கும் மிக குறைவான கட்டணத்தில் skyscanner app ஆல் புக்கிங் செய்ய முடியும். முயற்சி செய்து பாருங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications