சொன்னா நம்பமாட்டீங்க.. பத்தே செகண்டில் 3 நாடுகளுக்கு போயிடலாம்.. உண்மை தான்..! எப்படின்னு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் நினைத்தால், 10 செகண்டில் 3 நாடுகளுக்கு செல்ல முடியும். மேஜிக் மாதிரி சொல்றீங்களே.. இது எப்படி சாத்தியம் என மனதிற்குள் நினைக்கலாம்... ஆனால், இது உண்மைதானாம்... இது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்.

புதுப்புது இடங்களுக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள். எப்போதும் பரபரப்பாக இருந்து விட்டு விடுமுறை காலங்களில் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை போக்குவார்கள். வசதிக்கு தகுந்தபடி உள்ளூர் முதல் வெளிநாடு வரை ஒவ்வொருவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடம் குறித்து பெரிய லிஸ்டே வைத்து இருப்பார்கள்...

tour world Switzerland

10 செகண்டில் 3 நாடுகள்: எப்படியாவது ஒரு வெளிநாட்டு ரூர்-ஆவது போயிட்டு வந்துடனும் என்ற எதிர்பார்ப்பும் பல சுற்றுலா பயணிகளுக்கும் இருக்கும்... ஆனால் பட்ஜெட்டை நினைத்து இந்த பிளானை தள்ளிவைத்து இருப்பார்கள்.. அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வாருங்கள் என நினைப்பது புரிகிறது... தலைப்பில் சொன்னது போல 10 செகண்டில் 3 நாடுகளுக்கு செல்வது எப்படி சாத்தியம் என நினைத்து யோசித்துவிட்டு இது உண்மைதான என சிலருக்கும் சந்தேகம் எழும்.

எப்படி சாத்தியம்?: மேஜிக் மாதிரி சொல்றீங்களே.. அதெப்படி சாத்தியம் என மனதிற்குள் நினைக்கலாம்... ஆனால், இது உண்மைதானாம்.... ஸ்விட்சர்லாந்தில் தான் இந்த இடம் இருப்பதாக ஸ்விட்சர்லாந்தில் உள்ள பேசல் என்ற இடத்தில் இருந்துதான் 10 செகண்டில் மூன்று நாடுகளுக்கு செல்ல முடியும். பேசல் நகரில் மீடியேவல் ஓல்ட் டவுன் "mediaeval Old Town என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள கோப்ஸ்டோன் ஸ்டிரீட்ஸ் செல்ல வேண்டுமாம்..

3 நாடுகளின் எல்லைப்பகுதி: இங்கிருந்துதான் ஒரே நேரத்தில் மூன்று நாடுகளுக்கு செல்லும் அரிய வாய்ப்பு கிடைகிறதாம். இந்த இடத்தில் இருக்கும் ட்ரீலான்டெரெக் நினைவு சின்னம் அருகேதான் மூன்று நாடுகள் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் ஒரு பகுதி எல்லை இந்த இடத்தில் இருக்கிறது.

ஒரு எட்டு வைத்தால் போதும்: எனவே, இந்த இடத்தில் இருந்து வெறும் 10 செகண்டில் மூன்று நாடுகளுக்கும் சென்று விடலாம். இந்த பக்கம் ஒரு எட்டு வைத்தால்.. ஜெர்மனி, மற்றொரு பக்கம், பிரான்ஸ் இன்னொரு பக்கம் சுவிட்சர்லாந்து என மூன்று நாடுகளுக்கு சொந்தமான எல்லையை தொட்டு விடலாம்.. சுவிட்சர்லாந்துக்கு சென்ற சுற்றுலாபயணிகள் பலரும் இந்த இடத்திற்கு சென்று மறக்காமல் வீடியோ எடுத்து போட்டு வைரலாக்கி வருகிறார்கள்...

சொர்க்கபுரி: சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி என்று அழைக்கப்படும் இடம் சுவிட்சர்லாந்து. இயற்கையின் மொத்த அழகையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் சுவிட்சர்லாந்துக்கு செல்ல வேண்டும் என்பது பல சுற்றுலா பயணிகளின் கனவாக இருக்கும். சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை காணும் இடமெல்லாம், மலைகள், நீர்வீழ்ச்சிகள் என பிரமிக்க வைக்கும் இயற்கைக் காட்சியை கொண்டு இருக்கும்.

இங்குள்ள பேசல் நகரில்தான் இந்த மூன்று நாடுகளின் எல்லையும் உள்ளது. அதாவது டெக்னிக்கலாக இந்த மூன்று நாடுகளுக்கும் போனதாக அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்... ஆனால், உண்மையில் சுவிட்சார்லாந்தில் இருந்து இந்த இரண்டு நாடுகளுக்கும் செல்வது என்றால் உரிய விசா விதிமுறைகளை பின்பற்றியே செல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+