ஊட்டி ஓட்டலில் ஐந்து இளம் பெண்கள்.. உடை மாற்றும் அறையில் மர்ம நபர்.. சுற்றுலா தலத்தில் இப்படியுமா?
ஊட்டி: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 20 முதல் 25 வயதுள்ள 5 இளம்பெண்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் உணவு பரிமாறுதல் உள்பட பல்வேறு வேலைகளில் சேர்ந்து பணியாற்றி வந்தனர். இவர்கள் ஐந்து பேரும் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்கள் உடை மாற்றி உள்ளனர். அப்போது திடீரென மர்ம நபர் அங்கு மறைந்திருந்து வீடியோ எடுப்பது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கு தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். ஊட்டியில் ஏராளமான விடுதிகள், ஓட்டல்கள் அமைந்துள்ளன. ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். உணவு பரிமாறுவது, உணவு சமைப்பது, வரவேற்பாளர், அறையை சுத்தம் செய்வது உள்பட பல்வேறு பணிகளில் வெளிமாநில பெண்கள் மற்றும் ஆண்கள் ஈடுபடுகிறார்கள்..

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 5 இளம்பெண்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் உணவு பரிமாறுதல் உள்பட பல்வேறு வேலைகளில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் ஐந்து பேரும் திருமணம் ஆகாதவர்கள் ஆவர். இவர்கள் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்கள் உடை மாற்றியிருக்கிறார்கள். அப்போது மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள் சத்தம் போட்டனர். இதுகுறித்து புதுமந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன் பேரில் நீலகிரி மாவட்டம் ஊட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இதில் வடமாநில இளம்பெண்கள் தங்கி இருந்த வாடகை வீட்டின் அருகில் மற்றொரு வீட்டில் வசித்து வந்த அதே பகுதியை சேர்ந்த 35 வயதாகும் கிரிதரன் என்பவர் இளம்பெண்களை செல்போனில் வீடியோ எடுத்தது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். நாய்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த சில நாட்களாக கிரிதரன் தனது வீட்டிற்கு செல்லும் போது, ஜன்னல், கதவு வழியாக இளம்பெண்களை தொடர்ந்து நோட்டமிட்டு வந்து உள்ளார். பின்னர் அவர்கள் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்ததும் தெரியவந்ததாக போலீசார் விசாரணை குறித்து தெரிவித்தனர. இதுதொடர்பாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கிரிதரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி, வேறு யாரையும் ஆபாச வீடியோ எடுத்து உள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications