வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.. இந்து சமய அறநிலையத்துறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. சத்திய ஞான சபையின் 71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை கூறியதற்கு நீதிமன்றமும் அனுமதி கொடுத்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பெருவெளியில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டு இருந்தது.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞானசபையின் பெருவெளியில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக அரசு இந்த திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பின. சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

Vallalar International Centre in Vadalur Plan dropped - Hindu Religious and Charitable Endowments informs High Court

தமிழக அரசு வைத்த வாதம்

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் கூறிய தகவல் வருமாறு:-

"வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது. பெருவெளியில் ஜோதி தரிசனத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் நூலகம் கட்டிடம், அரங்கு, முதியோர் இல்லம் ஆகியவற்றை மாற்று இடத்தில் அமைக்க திட்டமிடப்படுள்ளது. தற்போது சத்திய ஞானசபை வசம் உள்ள 71 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைக்க உள்ளோம்" என்று கூறப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், 71 ஏக்கர் இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க அனுமதி அளித்தனர். மேலும் அந்த பணியை உடனடியாக துவங்கிவிடலாம் என்றும் கூறிய நீதிபதிகள் மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு ஏன்?

கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபை உள்ளது. அருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளார், இந்த பகுதியில் சத்திய ஞான சபையை அமைத்தார். அதற்காக பார்வதிபுரம் மக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலங்களை கொடையாக பெற்றார். இந்த நிலத்தில் தென்கோடியில் சத்திய ஞானசபை, தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்த வள்ளலார், மீதமுள்ள இடத்தை தன்னை பின்பற்றும் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாக பயன்படுத்தினார்.

இங்கு தைப்பூசம் ஜோதி தரிசனம் பிரமாண்டமாக நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இங்கு கலந்து கொண்டு ஜோதி தரிசனம் காண்பார்கள். ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திர நாளன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இதிலும் திரளான மக்கள் ஜோதி தரிசனம் காண்பார்கள்.

157 ஆண்டுகளாக

கடந்த திமுக ஆட்சியில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடலூரில் சர்வதேச மையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சன்மார்க்க நண்பர்கள் மற்றும் பார்வதிபுரம் மக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தீவிரப்படுத்தினர். கடும் போராட்டங்களையும் மீறி தமிழக அரசு கட்டுமான பணிகளை ஆரம்பித்தது.

வள்ளல் பெருமானாரின் வேண்டுகோளுக்கு இணங்க எங்கள் மூதாதையர்களான பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த மக்கள், தானமாக இடம் கொடுத்தனர். இந்த பெருவெளியில் எந்த விதமான கட்டிடமும் கட்டக் கூடாது. பெருவெளி அப்படியே தான் இருக்க வேண்டும். 1867 ஆம் ஆண்டு முதல் 157 வருட காலமாக பெருவெளியாக இருக்கும் இடத்தை, கட்டிடங்கள் கட்டி சிறுவெளியாக ஆக்கிவிடாதீர்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+