சென்னையில் இந்த ஆண்டு முதல் முறையாக கொளுத்திய வெப்பம்! வேலூரில் எவ்வளவு?
சென்னை: சென்னையில் இந்த ஆண்டு முதல் முறையாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இன்று பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் அறிவித்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 105. 08 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 84.38 வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

அது போல் சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 105. 08 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 87.44 வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அது போல் திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலையாக 100.22 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 84.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
சேலத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 97.34 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 77 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. மதுரையில் அதிகபட்ச வெப்பநிலையாக 101.12 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 81.31 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும். நாளை முதல் 31ஆம் தேதி வரை வெப்பநிலை புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக இருக்கும். சென்னையைப் பொறுத்தவரை 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இன்று தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்தாலும் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் அதிகபட்ச வெப்பநிலையாக 90.68 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 74.48 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கொடைக்கானலில் அதிகபட்ச வெப்பநிலையாக 75.2 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 57.02 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலையாக 74.48 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 56.12 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையாக 101.12 டிகிரி பாரன்ஹீட்டும், குறைந்தபட்சமாக 82.58 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
வேலூரில் 103.82 டிகிரி பாரன்ஹீட்டும், தஞ்சையில் 102.2 டிகிரி பாரன்ஹீட்டும் கடலூரில் 101.12 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவானது. அது போல் ஈரோடு, மதுரை, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
அது போல் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று வெயில் கடுமையாக இருக்கும். செம்ம ஹாட் நாளாக இருக்க போகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று சில இடங்களில் வெயில் 42 டிகிரி செல்ஸியஸ் வரை கூட செல்லும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஹீட் வேவ் இருக்கும். ராணிப்பேட்டை , வேலூரிலும் ஹீட் வேவ் இருக்கும். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் ஹீட் வேவ் இருக்காது. கன்னியாகுமரியில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications