மொத்தம் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தொட்ட வெயில்! சென்னையில் வெப்பம் எந்தளவு மோசம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தீவிரம் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்று முதல் 23 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இயல்பை விட அதிகமாக: 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதேபோல், அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°-39° செல்சியஸ் இருக்கக்கூடும். நாளை முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2° 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3" 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.0° செல்சியஸ், வேலூரில் 41.9° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், திருச்சியில் 41.3° செல்சியஸ், சேலம் & திருத்தணியில் 41.2 செல்சியஸ், மதுரையில் (நகரம்) & தர்மபுரியில் 41.0° செல்சியஸ் மற்றும் திருப்பத்தூரில் 40.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° பதிவாகியுள்ளது. 40° செல்சியஸ்
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° 39° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24° -30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.1° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று பதிவான வெப்பத்தின் அளவு குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருக்கிறது.
கரூர் பரமத்தி, வேலூர், திருச்சியில் 106 டிகிரியும், ஈரோடு, மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரியும், திருத்தணி, சேலம், மதுரை நகரம், திருப்பத்தூரில் 104 டிகிரியும், தஞ்சாவூரில் 103, தருமபுரியில் 102, பாளையங்கோட்டையில் 101 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications