பகல் 1 மணி வரை.. சென்னை உட்பட 14 மாவட்டங்களில் கொட்ட போகுது கோடை மழை! கவனமா இருங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது பகல் 1 மணி வரை 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் படுத்தி எடுத்து வந்தது. மாநிலத்தில் பல இடங்களில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

13 districts including chennai will get rain for next three hours says Chennai Meteorological dept

இந்தச் சூழலில் திடீரென மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து வருவதால் பொதுமக்களும மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே காலை 9 மணி வரை 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம தெரிவித்து இருந்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விருதுநகர், கடலூர், மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருசச்சி, புதுக்கோட்டையிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

14 மாவட்டங்களில் மழை: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது பகல் 1 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால் சில பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலத்தில் திடீரென பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை கொட்டுதே: நாளை மே 17ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிமி முதல் 50 கிமீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே 18ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+