இது செப்டம்பரா? இல்ல மே மாதமா! கொளுத்தும் வெயில்.. இன்று 13 மாவட்டங்களில் சதம்
சென்னை: பருவமழை தீவிரமடைய வேண்டிய இந்த நாட்களில், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இன்று 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை விட அதிகமாக பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை 34% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 269.2 மி.மீ மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 359.5 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1213.9 மி.மீ, கோவையில் 939.6 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.4 மி.மீ, நாகப்பட்டினத்தில் 122.3 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -38 சதவிகிதம் குறைவாகும். நாகை, திருவார், மயிலாடுதுறை என ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மழை குறைவாக பெய்திருக்கிறது.

அதேபோல அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்து வந்தன. உள் மாவட்டங்களில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் போதுமான அளவுக்கு உயராமல் இருந்தது. கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் போதுமான அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று 10 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபரான்ஹீட் கடந்த நிலையில் இன்று சென்னை உட்பட 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications