Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய சம்பவம் காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய வார்னிங்.. இந்த ஏரியாதான் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் வானிலை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13th night to 15th Nov - Will it be the 1st big spell for Nagai to Chennai coast says Tamil Nadu Weatherman

நேற்று இரவு மற்றும் மாலை நேரங்களில் சென்னை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், 08-11-20231 அன்று, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (09-11-2023) அதேபகுதியில் நிலவுகிறது.

2. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு இசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாநபுரம், விருதநகர், தூத்துக்குடி, தென்காசி, இருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கணமனழயும் பெய்யவாய்ப்புள்ளது.

11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
(12.11.2023 முதல் 14.11.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

16.11.2023. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நிலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர், தாகப்பட்டினம், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

13th night to 15th Nov - Will it be the 1st big spell for Nagai to Chennai coast says Tamil Nadu Weatherman

வெதர்மேன் பிரதீப் ஜான்: தமிழ்நாட்டின் வானிலை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், 13ம் தேதி இரவு முதல் நவம்பர் 15ம் தேதி வரை - நாகை முதல் சென்னை கடற்கரை வரை 1வது பெரிய மழை பெய்ய போகிறது. இந்த பருவமழை முதல் முறையாக கடலோரப் பகுதியில் கனமழை பெய்யும். கடற்கரைக்குள் மேகங்கள் எவ்வளவு ஆழமாக நகரும் என்பதை பொறுத்தே இது இருக்கும். இதை வைத்தே இது சாதாரண மழையா அல்லது அதிக கனமழையா என்பதை முடிவு செய்யும்.

நாகை முதல் சென்னை வரை 13ம் தேதி இரவு முதல் 15ம் தேதி வரை மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இங்கே ஒரே நேரத்தில் பல சுழற்சிகள் ஈடுபடுவதால் நாளை காலை வரை நாம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் இதில் இன்னும் தெளிவு பெற முடியும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+