ஏர்போர்டே ஸ்தம்பிச்சுருச்சு.. சென்னையில் பிரித்து மேய்ந்த மழை! 20க்கும் அதிகமான விமான சேவைகள் தாமதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக 20 க்கும் அதிகமான விமானங்களின் சேவை தாமதமாகி இருக்கிறது.

சென்னையில் நேற்று காலையில் இருந்து கடும் வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில் மதியம் மேகமூட்டம் சூழல் மழை பெய்யத் தொடங்கியது. பல பகுதிகளில் இரவு வரை இடி மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

20 plus flights have been delayed due to heavy rain in Chennai last night

சென்னையில் நுங்கம்பாக்கம், அம்பத்தூர், அண்ணா நகர், மாம்பலம், அசோக் நகர், கிண்டி, வேளச்சேரி, ஆவடி, முகப்பேர், பாடி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழை நீர் வழிந்தோடியது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

முக்கிய சாலைகளில் தேங்கிய மழை காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையம் அமைந்து இருக்கும் மீனப்பாக்கம், திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்ததால் 20க்கும் அதிகமான விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னை விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வர வேண்டிய 12 விமான சேவைகள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 11 விமானங்களும் தாமதமாகவே புறப்பட்டு சென்றன. இதனால் விமான பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என்று தெரிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+