சென்னை + 20 மாவட்டங்கள்.. தமிழகத்தில் இரவு முழுக்க மழை நிற்காது.. வானிலை மையம் கொடுத்த புதிய அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை கொட்டும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பிற்பகலுக்கு மேல் நல்ல மழை பெய்து வருகிறது. மாலை ஆரம்பிக்கும் மழை நள்ளிரவைத் தாண்டியும் கொட்டி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்வதால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு கிளைமேட் நிலவுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பு பெய்யும் இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவே இருக்கிறது.

21 மாவட்டங்களில் மழை
இதற்கிடையே தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மழை
அதேபோல அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, ராணிப்பேட்டை, சேலம், நீலகிரி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளிலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பு கூட ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "நேற்று (05-10-2025), மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய "சக்தி" தீவிரப் புயல், தெற்கு திசையில் நகர்ந்து இன்று (06-10-2025) காலை 0530 மணி அளவில் வலுக்குறைந்து புயலாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேலும் தெற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது துவாரகாவிலிருந்து (குஜராத்) மேற்கு-தென்மேற்கே சுமார் 940 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் கிழக்கு-தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நகர்ந்து, 07-10-2025 (நாளை) காலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுக்குறையக்கூடும்.
வரும் நாட்களில் மழை
இதனால் நாளைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 8ம் ததி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications