சென்னையும் இருக்கு! 22 மாவட்டங்கள் டார்கெட்.. அடுத்த 3 மணிநேரம் கொட்டப்போகும் மழை.. இதோ லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட மொத்தம் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டி மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தான் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை உள்பட தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணிகிரி, நீலகிரி, கடலூர், பெரம்பலூர், ராமதாநபுரம், தென்காசி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை சென்னையில் அதிகளவில் பெய்துள்ளது. இயல்பான மழையளவை விட 50 சதவீதம் வரை சென்னையில் வடகிழக்கு பருவமழை கொட்டியுள்ளது. சென்னையில் இந்த மழை அதிகரிப்புக்கு வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தான் காரணமாகும். இதனால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது.
மாறாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது இயல்பை விட 3 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. இருப்பினும் வரும் நாட்களில் மழை பெய்யும்பட்சத்தில் இயல்பான அளவை வடகிழக்கு பருவமழை எட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி இன்று தமிழகத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை 3 மணிநேரம் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications