அடுத்த 3 மணி நேரம்: கோவை உள்பட 23 மாவட்டங்கள்.. செம மழை இருக்கு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று லேசான மழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தின் கோவை, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருப்பூர், தென்காசி உளிட்ட 23 மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்" இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சிராப்பள்ளி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications