பிச்சு உதறப்போகும் பெரு மழை..3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! 14 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாயுப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

17.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18.10.2023 முதல் 22.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பெரியகுளம் PTO 14, (தேனி)பெரியகுளம் AWS (தேனி) 12, பேரையூர் (மதுரை) 10, சோத்துப்பாறை (தேனி), கமுதி (ராமநாதபுரம்), விருதுநகர் (விருதுநகர்), தொண்டி (ராமநாதபுரம்) தலா 9, திருச்சுழி (விருதுநகர்) 8, மணமேல்குடி (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 7, வைகை அணை (தேனி), மிமிசல் (புதுக்கோட்டை), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), திருச்சிராப்பள்ளி நகரம், விருதுநகர் AWS,, அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்) தலா 6, உப்பாறு அணை (திருப்பூர்), கல்லிக்குடி (மதுரை), மூலனூர் (திருப்பூர்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 5, கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குண்டடம் (திருப்பூர்), காங்கேயம் (திருப்பூர்), கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, முத்துப்பேட்டை (திருவாரூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), திருப்பத்தூர்,, அருப்புக்கோட்டை (விருதுநகர்), ஏழுமலை (மதுரை), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), அமராவதி அணை (திருப்பூர்) தலா 4, திண்டுக்கல்,, வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), சிவலோகம் (சிற்றாறு-II) (கன்னியாகுமரி), தாராபுரம் (திருப்பூர்), திருப்பூர் தெற்கு, மாஞ்சோலை (திருநெல்வேலி), காஞ்சிபுரம்,, ஆண்டிபட்டி (தேனி), வத்திராயிருப்பு (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), லால்பேட்டை (கடலூர்), சிவகாசி (விருதுநகர்), தர்மபுரி PTO, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை (தர்மபுரி), பார்வூட் (நீலகிரி), சிறுகமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி), மடத்துக்குளம் (திருப்பூர்), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), சிற்றாறு-I (கன்னியாகுமரி) தலா 3, தாலுகா அலுவலகம் திருப்பத்தூர், பெரியாறு அணை (விருதுநகர்), ராமநாடு KVK AWS (ராமநாதபுரம்), குளித்தலை (கரூர்), ராமநாதபுரம், முசிறி (திருச்சிராப்பள்ளி), ஊத்து (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), திருச்சிராப்பள்ளி விமானநிலையம், பேராவூரணி (தஞ்சாவூர்), கடலாடி (ராமநாதபுரம்), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெரியாறு (தேனி), மயிலாடுதுறை, தலைவாசல் (சேலம்), ஆயின்குடி (புதுக்கோட்டை), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), பூதலூர் (தஞ்சாவூர்) தலா 2, போடிநாயக்கனூர் (தேனி), சாத்தூர் (விருதுநகர்), மஞ்சளாறு (தேனி), KCS மில்-2 முரார்பாளையம் (கள்ளக்குறிச்சி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), பழனி (திண்டுக்கல்), அரண்மனைப்புதூர் (தேனி), காரியாப்பட்டி (விருதுநகர்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), வல்லம் (தஞ்சாவூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), பல்லடம் (திருப்பூர்), கல்லணை (தஞ்சாவூர்), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர், பண்ருட்டி (கடலூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), KCS மில்-2 கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), இலுப்பூர் (புதுக்கோட்டை), உசிலம்பட்டி (மதுரை), தோகமலை (கரூர்), கடவூர் (கரூர்), தஞ்சாவூர், மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), பையூர் AWS (கிருஷ்ணகிரி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
16.10.2023 மற்றும் 17.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
16.10.2023 மற்றும் 17.10.2023: கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18.10.2023:தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19.10.2023 மற்றும் 20.10.2023: மத்திய அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications