Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க நடக்குது? அடுத்தடுத்து வந்த 4 நெருக்கடி.. கவனித்து பார்க்கும் ஸ்டாலின்.. ஏதோ சரியில்லையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளும் திமுக தரப்பிற்கு பாஜக, அதிமுகவிடம் இருந்து பிரச்சனைகள், நெருக்கடிகள் வருவதை விட.. இயற்கை ரீதியாகத்தான் அடுத்தடுத்து பிரச்சனைகள் வருகின்றன. அதிலும் கடந்த 1 மாதத்தில் நடந்த 4 சம்பவங்கள் திமுகவிற்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளன.

வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

4 Consecutive natural disaster goes against DMK ruling in Tamil Nadu: What is happening?

சென்னை பாதிப்பு ஏன்?: சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீதான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும்.

அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த புயல் கிட்டத்தட்ட 17 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது. சென்னைக்கு அருகே 100 -200 கிமீ தூரத்திலேயே புயல் இருந்தது.

அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாக மாறியது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை மேகங்களை சென்னையை நோக்கி கொண்டு வந்தது. மேலும் கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.

தென் மாவட்ட வெள்ளம்: இதேபோல்தான் கடந்த வாரம் தென் மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை புயல் உருவாகவில்லை. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கன்னியாகுமரிக்கு கீழே கடல் பகுதியில் நகராமல் நிலைகொண்டு இருந்தது. இதுதான் மழைக்கு காரணம்.

பொதுவாக.. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலுக்கு மேலே இருக்கும் போது கடலில் மிக கனமழையை கொடுக்கும். அதுவே நிலத்திற்கு அருகே இருக்கும் போது அது நிலத்தில் கனமழையை கொடுக்கும். அதுவே ஒருவேளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் இருந்தால் நிலப்பகுதியில் மிக மிக அதிக கனமழையை தரும்.

அதிலும் மேலடுக்கு சுழற்சியை விட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் குமரிக்கு அருகிலேயே இருந்தது. இதை வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை நோக்கி காற்று தொடர் நெல்லை , தென்காசி, தூத்துக்குடி பக்கத்தில் இருந்து வந்து பெரிய சுழற்சியை ஏற்படுத்தியதே.. 4 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்ய, வெள்ளம் ஏற்பட காரணம் ஆகும்.

இப்படி 2 இயற்கை பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பாதிப்புகள் சென்னையில் ஏற்பட்டுள்ளன.

சென்னையில் மழை வெள்ளத்திற்கு இடையே மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்(சிபிசிஎல்) நிறுவனத்திலிருந்து மழை நீர் உடன் கச்சா எண்ணெய் வெளியேற்றப்பட்டது. இதில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

சிபிசிஎல் எனப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியிருக்கிறது. இது வெள்ளத்தில் வந்து அங்கே இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. இந்த வெள்ளத்தில் மீன்களும் எண்ணெய் காரணமாக செத்து மிதந்து உள்ளன.

கடைசியில் பக்கிங்காம் கால்வாயில் கலந்து, கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலில் கலந்திருக்கிறது. இதனால் இந்த பகுதியில் மீன் வளம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

மக்கள் அதிர்ச்சி: இந்த சம்பவம் அங்குள்ள மக்களின் உடல்நிலை, ஆரோக்கியத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அங்கே மீன்கள் வளம், கடல் வளத்தையும் பாதித்து உள்ளது. அங்கே கடலில் கலந்த எண்ணெய் பெருமளவில் நீக்கப்பட்டாலும்.. இதை மொத்தமாக நீக்குவது என்பது நடக்கவே முடியாத காரியம் என்கிறார்கள் கடலியல் வல்லுனர்கள்.

வாயு கசிவு: கசிவு: இது போல இன்று சென்னையை அடுத்த எண்ணூர் கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து, கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. எண்ணூர் சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறலால் அவதி அடைந்தனர்.

அருகே இருந்த குடியிருப்புகளுக்குள் இந்த அமோனியம் வாயு பரவியது. கடலில் 2 கிமீ தூரத்தில் இருந்து கசிந்து வெளியேறிய வாயு.. ஊருக்குள் வந்தது. இதனால் ஊருக்குள் இருந் மக்கள் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. மக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள மக்கள் பலரும் இதனால் வேறு வழி இன்றி வீட்டை விட்டு ஓடினார்கள். பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பதற்றம் அடையாமல் வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இப்படி ஆளும் திமுக தரப்பிற்கு பாஜக, அதிமுகவிடம் இருந்து பிரச்சனைகள், நெருக்கடிகள் வருவதை விட.. இயற்கை ரீதியாகத்தான் அடுத்தடுத்து பிரச்சனைகள் வருகின்றன. அதிலும் கடந்த 1 மாதத்தில் நடந்த 4 சம்பவங்கள் திமுகவிற்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+