சென்னை உட்பட 5 மாவட்டங்களுக்கு அலர்ட்! இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! வெதர் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்திய நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டும் இதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில்தான் இந்த வெயில் தீவிரமாக இருக்கும். ஆனால் இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது.

எப்போதுமே வேலூரில்தான் வெயில் அதிகமாக பதிவாகும். ஆனால் இந்த முறை வேலூரை விட ஈரோட்டில்தான் + கொங்கு மாவட்டம் என வெயில் அதிகமாக பதிவாகியிருந்தது.
இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.
இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது சென்னையில் வெயில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் வெயில் பதிவாகி இருந்தது.
இரு தினங்களுக்கு முன்னர் சென்னை மீனம்பாக்கத்தில் 41.9 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியிருந்தது. அதேபோல திருத்தணியில் 42.5 டிகிரி செல்சியஸ் (109 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெயில் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் அதிகபட்சமாக நேற்று முன்தினம் திருவள்ளூரில் 112 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது.
மற்ற வட மாவட்டங்களான வேலூர் 111, திருத்தணி 108, திருவண்ணாமலை 106, ஈரோட்டில் 105 டிகிரி, சென்னை 104, மதுரை, 104, திருச்சி 103, நாகை 101 டிகிரி ஃபாரான்ஹீட் என வெயில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது காலை 10 மணி வரை, சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை என 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications