6வது ரவுண்டு மழை.. இன்று தமிழ்நாட்டில் தொடங்குது! அடுத்த 4 நாட்கள் கனமழை வெளுத்து வாங்கப்போகுது
சென்னை: தமிழ்நாட்டில் 6 வது சுற்று மழை இன்று தொடங்கப்போவதாகவும், அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "இன்று (24.12.2023) முதல் பனிப்பொழிவும், குளிரும் படிப்படியாக குறையும். டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை பதிவாகும். கடலோரத்தின் ஒரிரு இடங்களில் கனமழை பதிவாக கூடும் இன்று முற்பகலில் மழை டெல்டாவில் படிப்படியாக துவங்கும். தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை எதிர்ப்பார்க்கலாம்.

டிசம்பர் 24 முதல் 27 வரை 4 நாட்களுக்கு 6 ஆம் சுற்று வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் சற்றே கனமழை முதல் கனமழையை கொடுக்கும். டிசம்பர் 28 ம் தேதி முதல் 31 ஆம் தேதி பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிககனமழை வரை கொடுக்கும்.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் அதித கனமழைக்கு வாய்ப்பு உள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 25.12.2023 முதல் 28.12.2023 வரை: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 29.12.2023: தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 - 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 - 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 - 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிட்டு இருந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications