உக்கிரத்தை தணிக்கும் சூரியன்.. தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு.. தேதி குறித்த வானிலை மையம்!
சென்னை: தமிழகத்தில் ஜூன் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் துவங்கக்கூடும்.

இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றும்
31ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
1 மற்றும் 2ம் தேதியில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 3 மற்றும் 4ம் தேதியில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையை பொறுத்த அளவில் இன்றும் நாளையும், அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் ஒருசில பகுதிகளில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 31ம் தேதி தொடங்கி 2ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-2- செல்சியஸ்) சற்று குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 5 செ.மீ, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 4, வால்பாறை PAP (கோயம்புத்தூர் 3, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), UPASI தேயிலை அறிவியல் துறை (கோயம்புத்தூர்), சிவலோகம் (சித்தர் II) (கன்னியாகுமரி) தலா 2, சிற்றாறு-1 (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ என மழை பெய்திருக்கிறது.
வெப்பநிலையை பொறுத்த அளவில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2-3" செல்சியஸ் ஓரிரு இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி/ இயல்பை விட சற்று அதிகமாகவும் இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 41.3° செல்சியஸ் பதிவாகியுள்ளது. வட தமிழக சமவெளி பகுதிகளில் 32-41° செல்சியஸ்; தென் தமிழக சமவெளி பகுதிகளில் 30-38° செல்சியஸ்; புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 38" மற்றும் 37° செல்சியஸ்: மற்றும் மலைப் பகுதிகளில் 23-25° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 41.3° செல்சியஸ் (+2.4° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 41.1 செல்சியஸ் (+3.1' செல்சியஸ்) பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications