நெருங்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையில் இன்று இடி - மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை மையம்
சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகே நிலவும். இதனால் சென்னையில் இன்று இடி - மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தின் வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? என்றும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் மேற்கு திசையில் நகர்ந்தது. இது நேற்று காலை 8.30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர -வடதமிழக கடலோர பகுதியில் நிலவுகிறது.

இது மேலும் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகேயும் நிலவக்கூடும்.
இதன் காரணமாக இன்று வடகடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிருஇடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்பிறகு நாளை மறுநாள் (டிசம்பர் 26) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 27 ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும், நாளையும் வடதமிழக கடலோர பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு டிசம்பர் 26, 27 தேதிகளில் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.
அதேவேளையில் வங்கக்கடல் பகுதியை எடுத்து கொண்டால் இன்று மற்றும் நாளை என்று 2 நாட்கள் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications