சிக்கிமில் நொடியில் நிலைகுலைந்த நீர்மின் நிலையம்.. நிலச்சரிவால் அடியோடு மறைந்து போன வீடியோ காட்சி
கேங்டாக் : சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி மிகப்பெரிய நீர்மின் நிலையம் அடியோடு சரிந்து விழுந்தது. பார்ப்போரை பதை பதைக்க வைக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையின் நீர் மின் நிலையம் தான் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்திருக்கிறது.
இமயமலையில் அமைந்துள்ள இந்தியாவின் அழகான மாநிலங்களில் சிக்கிம் மிக முக்கியமானது. சிக்கிம் மாநிலம் என்பது பூட்டான், திபெத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை எல்லையாக கொண்ட வடகிழக்கு மாநிலம் ஆகும். இந்தியாவின் மிக உயரமான மலையான காஞ்சஞ்சங்கா (8,586மீ ) சிக்கிம் மாநிலத்தில் தான் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள வானிலை பலருக்கும் மிகவும் பிடிக்கும். இங்குள்ள பனிப்பாறைகள், ஆல்பைன் புல்வெளிகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.

சிக்கிம் மாநிலம் இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது. மலைப்பகுதியில் உள்ள சிக்கிமில் நிலச்சரிவு அபாயம் அதிகமாகும்.அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ள பகுதிகள் உள்ளன. மிகப்பெரிய அளவில் மழை பெய்யும் பகுதிகள் இருப்பதால் பெரிய அணைகள் மற்றும் நீர் மின் நிலைய திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளன. அப்படித்தான் சிக்கிம் மாநிலத்தில் தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையில் நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டீஸ்டா ஸ்டேஜ் அணை நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்படுவது உண்டு. இதனால் ஒரு கட்டத்தில் அபாயகரமான நிலை ஏற்ட்டதால் நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோவில் ஒரே நொடியில் நீர் மின்நிலையம் நிலச்சரிவில் காணாமல் போனது.
A massive landslide hit the NHPC Teesta Stage V Power House in Sikkim.#ViralVideo #Viral #Landslide #Sikkim #PowerCorridors pic.twitter.com/6S1l7llDQG
— POWER CORRIDORS (@power_corridors) August 20, 2024
முன்னதாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் இதே டீஸ்டா அணையின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டது. அதன்பிறகு அணை செயலிழந்துவிட்டது. அதன்காரணமாக இப்போது ஏற்பட்ட நிலச்சரிவால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.. அதேநேரம் அதிகாரிகள் தற்போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருந்தனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications