இத்தனை நாள் பெருசா மழை இல்லை.. ஆனா இனி.. தமிழக வானிலையில் பெரிய ட்விஸ்ட்.. வருகிறான் ராட்சசன்
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும்.
இந்த வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் பொதுவாக நல்ல மழை பெய்யும். ஆனால் இந்த மாதம் பெரிதாக மழையே இல்லாமல் பொய்த்துவிட்டது. தீபாவளி நாளில் எல்லாம் இவ்வளவு வெயில் அடித்ததே இல்லை. ஆனால் இந்த முறை பெரிதாக மழையே இல்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகும் நிலையில் மழை தீவிரம் அடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று மழை எப்படி: இது போக கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.11.2023 மற்றும் 15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில
இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் மழை: 16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.11.2023 மற்றும் 18.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில
பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸ் மற்றும்
குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில
பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32
செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருப்பூண்டி
(நாகப்பட்டினம்) 5, கிளானிலை (புதுக்கோட்டை), மண்டபம் (ராமநாதபுரம்), மணியாச்சி
(தூத்துக்குடி), கயத்தார் (தூத்துக்குடி) தலா 4, ஆயிக்குடி (தென்காசி), ராமநாதபுரம் KVK AWS
(ராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி) தலா 3,
பாபநாசம் (திருநெல்வேலி), ஆயிங்குடி (புதுக்கோட்டை), கடனா அணை (தென்காசி),
மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 2, தானியமங்கலம் (மதுரை) 2, ஓட்டப்பிடாரம்
(தூத்துக்குடி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்). தலைஞாயிறு (நாகப்பட்டினம்)2, நாகுடி
(புதுக்கோட்டை) தலா 2, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), மேலூர் (மதுரை), கடம்பூர் (தூத்துக்குடி),
திருவாடானை (ராமநாதபுரம்), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), பேராவூரணி
(தஞ்சாவூர்), புலிப்பட்டி (மதுரை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பெரியாறு (தேனி),
இளையாங்குடி (சிவகங்கை) 1,
சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) 1, தீர்த்தாண்டதானம்
(ராமநாதபுரம்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), எச்சன்விடுதி
(தஞ்சாவூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), சங்கரன்கோயில் (தென்காசி), அதிராமபட்டினம்
AWS (தஞ்சாவூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), எழுமலை (மதுரை), ஊத்து (திருநெல்வேலி),
மாஞ்சோலை (திருநெல்வேலி), நம்பியாறு அணை (திருநெல்வேலி), பள்ளமோர்குளம்
(ராமநாதபுரம்), நாங்குனேரி (திருநெல்வேலி), இடையப்பட்டி (மதுரை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
12.11.2023: வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்க கடல் பகுதிகள்:
13.11.2023: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.11.2023: தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் கூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஓட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஓட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
12.11.2023: லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications