நீலகிரியில் கனமழை! சப்தமில்லாமல் பிளந்த கூடலூர்- வயநாடு சாலை! 20 அடிக்கு விரிசலால் பரபரப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர் மழையால் வயநாடு செல்லும் மலைப்பாதையில் விரிசல் ஏற்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு செல்லும் கைதொல்லி மலைப்பாதை சாலையில் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 20 அடி நீளத்திற்கு தடுப்புடன் சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்தனர்.
வான ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் சப்தமே இல்லாமல் சாலையில் விரிசல் விடுகிறது. லேசான விரிசல் பிறகு அப்படியே பாலம் பாலமாக வெடிக்கிறது. 20 அடி நீளத்திற்கு இது போல் சாலை விரிசல் அடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கல்லாறு, ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள தண்டவாளத்தில் மண், பாறைகள் சரிந்து மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை பெய்தது.
மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அங்குள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அத்துடன் கைதொல்லி சாலையோரத்தில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இது போல் குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழைக்கு சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.
மழையால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரம் உள்ள மரப்பாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலை ரயில் பாதையில் பாறை விழுந்ததால் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் கோடை மழை தீவிரம் அடைந்த நிலையில் அங்கு தினந்தோறும் மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் திருச்சி, அவினாசி, சத்தி செல்லும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதி, கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. லங்கா கார்னர் பகுதியில் தேங்கிய தண்ணீரால் அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டது.
கோவை சிங்காநல்லூர் பஸ்நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் பயணிகளும் வியாபாரிகளும் அவதியடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருதிறது. நீர் நிலைகள் நிரம்பிவிட்டதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அது போல் மதுரையில் நேற்று மாலை மணிக்கணக்கில் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் தூக்கமில்லாமல் தவித்தனர். வைகை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதால் தென் மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications