சென்னைக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை... காலை 8.30 மணி வரை மிக கனமழை பதிவாக வாய்ப்பு
சென்னை:சென்னைக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8.30 மணி வரையிலான காலகட்டத்தில் சென்னையில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை விட்டு விட்டு செவ்வாய்கிழமை தொடந்த நிலையில், இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்ற காலை அறிவித்தது. இந்நிலையில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது

அதன்படியே சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. சென்னையில் சோழிங்கநல்லூர், தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மணலி, மாதவரம், தண்டையார் பேட்டை என பல இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை 4.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 7.29 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் கோடம்பாக்கத்தில் 7 செமீ மழையும்,, ஆலந்தூரில் 7 செமீ மழையும், உத்தண்டியில் 6.6 செமீ மழையும், தேனாம்பேட்டையில 6.3 செமீ மழையும், அடையாறில் 6 செமீ மழையும் பெய்துள்ளது. பெருங்குடியில் 5.8 செமீ மழையும், மீனம்பாக்கத்தில் 5.8 செமீ மழையும், அண்ணா நகரில் 5 செமீ மழையும் பெய்துள்ளது.
இந்நிலையில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு நவம்பர் 15ம் தேதிக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளையும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
சென்னையை பொறுத்தவரை நாளை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications